Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 76)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நார” என்னும் சொல் ஸர்வேச்வரனைக் கூறுதலும், அதன் மூலமாக “நாராயண” என்னும் சொல்லுக்குக் கிட்டும் அர்த்தமும்

மூலம் – ஸர்வ வ்யாபகத்வாதி விசிஷ்டனாய் இருக்கச்செய்தே தத்கத தோஷங்களையும் தத்ப்ரயுக்த தோஷங்களையும் கழிக்கிற ஹயரஹிதன் என்கிற வ்யுத்பத்தியாதலும், “நூ நயே” இத்யாதிகளாலும், “ஜஹ்நுர் நாராயணோ நர:” என்று நாமதேயமாகச் சொல்லுகையாலும் “ஆபோ நாராயணோத்பூதா: தா ஏவாஸ்யாயநம் புந:” என்கிற வ்யாஸ ஸ்ம்ருதி வாக்யத்தாலே “ஆபௌ வை நரஸூநவ:” இத்யாதிகளில் நர சப்தமும் நாராயணனையே சொல்லுகிறதென்னுமிடம் ஸுவ்யக்தமாகையாலும் நரனென்று நித்யனாய் ஸர்வநேதாவான ஸர்வேச்வரனுக்குத் திருநாமமாகையாலே நர ஸம்பந்திநோ நாரா நர: ஸ புருஷோத்தம: நயநத்யகில விஞ்ஜானம் நாசயத்யகிலம் தம: ந ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத் ஸநாதந: நர ஸம்பந்திந: ஸர்வே சேதநாசேதநாத்மகா: ஈசிதவ்யதயா நாரா தார்ய போஷ்யதயா ததா நியாம்யத்வேந ஸ்ருஜ்யத்வ ப்ரவேச பரணைஸ்ததா அயதே நிகிலாந் நாராந் வ்யாப்நோதி க்ரியயா தயா நாராச்சாப்யயநம் தஸ்ய தைஸ்தப்தாவ நிரூபணாத் நாராணாமயநம் வாஸஸ்தே ச தஸ்யாயநம் ஸதா மரமா ச கதிஸ்தேஷாம் நாராணாமாத்மநாம் ஸதா என்று அஹிர்புத்நயாதிகள் நிர்வசநம் பண்ணினபடியே, “நர ஸம்பந்தி நாரம்” என்கிற வ்யுத்பத்தியாலே ஸர்வேச்வரனுடைய ஸ்வரூப நிரூபக தர்மங்களும் நிரூபித ஸ்வரூப விசேஷண தர்மங்களும் வ்யாபாரங்களும் விக்ரஹ விசேஷங்களும் மற்றுமுள்ள த்ரிவித சேதநாசேதநங்களுமெல்லாம் நார சப்தார்த்தமானபோது ஸ்வவ்யதிரிக்த ஸர்வத்துக்கும் ஆச்ரயத்வாதி ரூபேண நிற்கும் ப்ரகாரம் விவக்ஷிதமாகையாலே ஸ்வாநிஷ்டத்வாதிகளைச் சொல்லுகிறது.

– “நர” என்னும் பதம் “நாராயண” என்னும் பொருளையும் தருவதாகும் என்பதற்கான காரணங்கள்: அனைத்து சேதந அசேதநங்களிலும் வ்யாபித்து நின்றாலும், அவைகளால் தனக்கு உண்டாகவல்ல தோஷங்களும் துன்பங்களும் தன்னை அண்டாமல் இருப்பதால் “தாழ்ந்தவற்றை விலக்குபவன்” என்னும்படியாக உள்ளவன் “ந்ரு” என்னும் தாது “வழி நடத்துதல்” என்னும் பொருளைத் தருகிறது; ஆகவே “வழி நடத்துபவன்” என்னும் காரணத்தால் “நர” ஆகிறது. ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் - ஜஹ்நுர் நாராயணோ நர: - ஜஹ்நு = அடியார்கள் அல்லதார்க்குத் தனது மேன்மையை மறைப்பவன், நர: = சேதந அசேதநங்கள் அழியாமல் இருக்கப் பெற்றவன். வ்யாஸ ஸ்ம்ருதி (2-16) - ஆபோ நாராயணோத்பூதா: தா ஏவாஸ்யாயநம் புந: - ஜலம் நாராயணனிடமிருந்து உண்டானது, அதுவே அவனுக்கு இருப்பிடம் ஆகும் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஆபௌ வை நரஸூநவ: - ஜலங்கள் அனைத்து நர என்னும் நாராயணனின் மக்களே ஆகும் – என்பது காண்க. ஆகவே “நர” என்பதால் எப்போதும் உள்ளவனும், அனைத்தையும் நியமிப்பவனும் ஆகிய நாராயணனே கூறப்படுகிறான் என்றாகிறது. மேலும் அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள வரிகளைக் கீழே காண்க (52: 50 – 54):