Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 72)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“அ”, “நர”, “அயந” ஆகியவை ஸர்வேச்வரனையே வெவ்வேறு ஆகாரங்களுடன் காட்டுகின்றன
மூலம் – இங்கு ப்ரதமாக்ஷரத்தாலும், நாரசப்தத்தில் ப்ரக்ருதியான நர சப்தத்தாலும், அயந சப்தத்தாலும் ஸர்வேச்வரனைச் சொல்லுகிறபோது ரக்ஷகத்வ காரணத்வ நித்யத்வ நேத்ருத்வ, ஆதாரத்வ அந்தர்யாமித்வாதிகளான ஆகாரபேதங்களாலே மூன்றும் ஸப்ரயோஜநங்கள்.
– திருமந்த்ரத்தின் தொடக்கத்தில் காணப்படும் ப்ரணவத்தில் உள்ள முதல் எழுத்தான “அ” என்பதாலும், “நார” என்பதன் அடிப்படையான “நர” என்பதாலும், “அயந” என்பதாலும் ஸர்வேச்வரனை உரைக்கும்போது, இவை அனைத்தும் – அவனுடைய காக்கும் தன்மை, அனைத்திற்கும் காரணமாக உள்ள தன்மை, எப்போதும் உள்ள தன்மை, அனைத்தையும் வழி நடத்தும் தன்மை, அனைத்திற்கும் ஆதாரமாக உள்ள தன்மை, அனைத்திற்கும் அந்தர்யாமியாக உள்ள தன்மை முதலான பலவற்றையும் வெளிப்படுத்துகின்றன.