Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 69)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூலம் – இவ்விடத்தில், “ஸ்ருஷ்ட்வா நாரம் தோயமந்த: ஸ்திதோஹம் யேந ஸ்யாந்மே நாம நாராயணோதி”, “ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூநவ: தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண: ஸ்ம்ருத:” இத்யாதிகளிலே அப்புக்களையெடுத்தது தத்வாந்தரங்களுக்கு உபலக்ஷணம் என்னுமிடம் நராஜ்ஜாதாநி தத்த்வாநி நாராணீதி ததோ விது: தாந்யேவ சாயநம் தஸ்யே தேந நாராயண: ஸ்ம்ருத: இத்யாதிகளாலே ஸித்தம். இந்த பஹுவ்ரீஹி ஸமாஸமான நிர்வசநத்தில் “நராஜ்ஜாதாநி தத்த்வாநி” என்று நார சப்தார்த்தம் சொல்லுகையாலே மஹோபநிஷத் ப்ரப்ருதிகளிற் சொல்லுகிறபடியே ப்ரஹ்மேசாநாதி ஸர்வத்தையும் பற்ற நாராயணனுடைய ஸர்வவித காரணத்வமும், அயந சப்தார்த்தத்தில் “ஈயத இத்யயநம்” என்கிற கர்ம வ்யுத்பத்தியாலே இவற்றை வ்யாப்யமாக உடையவனுடைய ஸர்வவ்யாப்யகத்வமும், அதுக்கு உபயுக்தமான நிரதிசய ஸூக்ஷ்மத்வமும் சொல்லிற்றாயிற்று. இப்பொருள்கள் “ஈயதே அஸ்மிந்” என்கிற அதிகரண வ்யுத்பத்தியிலும் வரும். நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: நாரஸ்த்விதி ஸர்வபும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: நாரோ நராணாம் ஸங்க்யாத: தஸ்யாஹமயநம் கதி: தேநாஸ்மி முநிபிர்நித்யம் நாராயண இதீரித: நாரசப்தேந ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே புதை: தேஷாமயநபூதத்வாத் நாராயண இஹோச்யதே தஸ்மாந்நாராயணம் பந்தும் மாதரம் பிதரம் குரும் நிவாஸம் சரணம் சாஹு: வேதவேதாந்தபாரகா:
– கீழே உள்ள வரிகள் காண்க: வராஹபுராணம் (2-12) - ஸ்ருஷ்ட்வா நாரம் தோயமந்த: ஸ்திதோஹம் யேந ஸ்யாந்மே நாம நாராயணோதி – நாரம் எனப்படும் நீரைப் படைத்து அதற்குள் நான் இருந்தேன். ஆகவே எனக்கு நாராயணன் என்னும் பெயர் வந்தது. மநுஸ்ம்ருதி (1-10) - ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூநவ: தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண: ஸ்ம்ருத: - நீரானது நாரம் எனப்படுகிறது. காரணம் அது நரனிடமிருந்து (நரன் – நாசம் அற்றவன், ஸர்வேச்வரன்) உண்டானதாகும். அது அவனுக்கு முன்னர் இருந்த இடமாக உள்ளதால், அவன் நாராயணன் எனப்படுகிறான். இந்த வரிகளில் நீரைக் குறித்து உரைத்தமை என்பது மற்ற தத்துவங்களை முழுவது உரைக்காமல் ஒன்றை மட்டுமே எடுத்துக்காட்டாக உரைப்பதற்காக ஆகும்; இந்தக் கருத்தை, மஹாபாரதம் ஆநுசாநிகபர்வம் (178-7) - நராஜ்ஜாதாநி தத்த்வாநி நாராணீதி ததோ விது: தாந்யேவ சாயநம் தஸ்யே தேந நாராயண: ஸ்ம்ருத: - ப்ருத்வீ முதலான தத்துவங்கள் நரனாகிய ஸர்வேச்வரனிடமிருந்தே உண்டானதாகும்; ஆகவே அவை நாரங்கள் ஆகும்; அவனுக்கு அவையே இருப்பிடமாக உள்ளதால் அவன் நாராயணன் எனப்படுகிறான் – என்பதில் காணலாம் (அதாவது இங்கு பூமியை மட்டும் உரைத்தமை காண்க). இங்கு பஹுவ்ரீஹி மொழித்தொகை விளக்கத்தில், “நராஜ்ஜாதாநி தத்த்வாநி” என்ற இடத்தின் மூலம் “தத்த்வங்கள் நரனிடமிருந்து வெளிப்பட்டன” என்று உணர்த்தப்பட்டதால், அவை நாரங்கள் எனப்படுகின்றன என்பது தெளிவு. இதன் மூலம், மஹாநாராயண உபநிஷத் முதலானவற்றில் கூறப்பட்டபடி (ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாநோ நாபோ நாக்நீஷோமௌ நேமே த்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி ந ஸூர்யோ ந சந்த்ரமா: – தொடக்கத்தில் நாராயணன் மட்டுமே இருந்தான்; நான்முகன், சிவன், நீர், அக்னி, சோமன், த்யுலோகம், பூமி, நக்ஷத்ரங்கள், சூரியன், சந்த்ரன் போன்ற எதுவும் இல்லை), நான்முகன் மற்றும் சிவன் போன்ற அனைத்திற்கும் நாராயணனே அனைத்துவிதமான காரணமாக இருந்தான் என்பது மேலும் தெளிவாகிறது. “அயந” என்னும் சப்தம், “ஈயத இத்யயநம்” என்பதன் மூலம் வெளிப்பட்டதாகும். அதாவது எங்கும் வியாபிக்கப்படும் (நிறைதல்) வஸ்துக்களை இந்தப் பதம் கூறுகிறது. இதன் மூலம் அவன் அனைத்திலும் வியாபித்தும், அவை அனைத்தும் அவனால் வியாபிக்கப்பட்டும் உள்ளன என்பதும், இவ்விதம் அனைத்தையும் வியாபித்து நிற்கத் தேவையான மிகவும் நுண்ணியதாக உள்ள தன்மை என்பதும் இங்கு கூறப்பட்டது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும், “ஈயதே அஸ்மிந்” என்பதால் வெளிப்படும் “அயந” என்பதிலும் தேறும்; இவ்விதம் கொள்ளும்போது அனைத்தும் வியாபித்திருப்பதற்கான ஆதார வஸ்துவை உரைத்தல் என்றாகிறது. நாராயண என்னும் பதத்தை தத்புருஷ மொழித்தொகை அடிப்படையில் “நாராணம் + அயநம்” என்று பிரிக்கலாம்; அதாவது நாரங்களுக்கு இருப்பிடமானவன் என்று பொருள். இவ்விதம் கொண்டால், அந்தப் பதமானது “நாராயணம்” என்று பொதுப்பாலில் இருத்தல் வேண்டும். ஆனால், நிருக்தி (இலக்கணம் எனலாம்) அடிப்படையில், “நாராயண:” என்னும் ஆண்பால் விரோதமாகாது. கீழே உள்ள பல ப்ரமாண வரிகளின் மூலம் இந்தக் கருத்துக்களைக் காணலாம்: மஹாபாரதம் உத்யோகபர்வம் (63-32) - நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: - நாரங்களுக்கு ஆதாரமாக உள்ளதால் நாராயணன் எனப்படுகிறான். பாத்மோத்தர புராணம் - நாரஸ்த்விதி ஸர்வபும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: - நாரம் என்று அனைத்து ஜீவன்களுடைய கூட்டம் கூறப்படுகிறது. அவை அடையவேண்டியவனாகவும், அவை அடைவதற்கு உபாயமாகவும் உள்ளதால் நாராயணன் எனப்படுகிறான். பாத்மோத்தர புராணம் - நாரோ நராணாம் ஸங்க்யாத: தஸ்யாஹமயநம் கதி: தேநாஸ்மி முநிபிர்நித்யம் நாராயண இதீரித: - நாரம் என்பது நரர்கள் என்னும் ஜீவன்களுடைய கூட்டம் ஆகும். அவற்றுக்கு அடையப்படவேண்டியவனாகவும், அடைவதற்கான உபாயமாகவும் நான் உள்ளதால், முனிவர்களால் எப்போதும் நான் “நாராயணன்” எனப்படுகிறேன். பாத்மோத்தர புராணம் - நாரசப்தேந ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே புதை: தேஷாமயநபூதத்வாத் நாராயண இஹோச்யதே தஸ்மாந்நாராயணம் பந்தும் மாதரம் பிதரம் குரும் நிவாஸம் சரணம் சாஹு: வேதவேதாந்தபாரகா: - நார என்னும் பதம் ஜீவன்களுடைய கூட்டத்தைக் குறிப்பதாக அறிவுள்ளவர்கள் கூறுகிறார்கள். அவற்றுக்கு இருப்பிடமாக உள்ளதால் நாராயணன் எனப்படுகிறான். ஆகவே வேதங்களை நன்றாக அறிந்தவர்கள் நாராயணனை உறவினனாகவும், தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும், ஆதாரமாகவும், உபாயமாகவும் உரைக்கிறார்கள்.