Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 61)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்
மூலம் – ஏவம் சிக்ஷித நாநார்த்த நம: சப்த ஸமந்விதா: ஸர்வே கரணதாம் யாந்தி மந்த்ரா: ஸ்வாத்மஸமர்ப்பணே ஜீவஸாமாந்ய முகத: ச்ருங்க க்ராஹிகயாபி வா மகாரௌ தார நமஸோ: ஸ்வாநுஸந்தாநதாவிஹ இஹ யா ஸ்வாநுஸந்தாந ப்ரக்ரியைகஸ்ய தர்சிதா அந்யேஷாமபி தத்ஸாம்யாத் நாந்யோந்யசரணா இமே
– ஏவம் சிக்ஷித நாநார்த்த நம: சப்த ஸமந்விதா: ஸர்வே கரணதாம் யாந்தி மந்த்ரா: ஸ்வாத்மஸமர்ப்பணே – இப்படியாக “நம:” என்பதுடன் இணைக்கப்பட்டதான பல்வேறு அர்த்தங்கள் கொண்ட அனைத்து மந்த்ரங்களும், தன்னுடைய ஆத்மாவைச் சமர்ப்பிக்கும்போது செயல்படக்கூடிய மந்த்ரங்களாக உள்ளன. ஜீவஸாமாந்ய முகத: ச்ருங்க க்ராஹிகயாபி வா மகாரௌ தார நமஸோ: ஸ்வாநுஸந்தாநதாவிஹ – இந்த மூல மந்த்ரத்தில் ப்ரணவம் மற்றும் “நம:” ஆகிய இரண்டிலும் உள்ள “ம” என்னும் எழுத்து பொதுவாக ஜீவாத்மாவைக் கூறுவதன் மூலமாகவாவது அல்லது நேராகக் கொம்பைப் பிடித்தல் என்னும் நியாயம் காரணமாகவாவது (அஹம் என்பதால்), தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தைக் குறித்து எப்போதும் சிந்திப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. இஹ யா ஸ்வாநுஸந்தாந ப்ரக்ரியைகஸ்ய தர்சிதா அந்யேஷாமபி தத்ஸாம்யாத் நாந்யோந்யசரணா இமே – மூலமந்த்ரத்தில் எந்த ஒரு ஜீவனுக்கு தன்னுடைய ஸ்வரூபத்தை எண்ணவேண்டிய வகை உரைக்கப்பட்டதோ, மற்ற ஜீவாத்மாக்களுக்கும் அதே எண்ணவேண்டிய வகை ஒத்ததாக உள்ளதால், ஜீவாத்மாக்கள் ஒருவருக்கு ஒருவர் ரக்ஷகர் அல்லர்.