Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 59)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்
மூலம் – இங்கு ஸ்தூலமான அர்த்தமாவது வ்யாகரணத்தைத் துவக்கி வருகிற ஸ்புட வ்யுத்பத்தியாலே தோற்றுமது. ஸூக்ஷ்மமாவது வர்ணஸாம்யாதிகளைக் கொண்டிழிகிற நிருக்தபலத்தாலே தோற்றுமது. பரமாவது ரஹஸ்ய சாஸ்த்ரங்களில் சொல்லுகிற அக்ஷர நிகண்டு ப்ரக்ரியையாலே தோற்றுமது.
– மேலே கூறப்பட்ட அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை வரிகளின் ஸ்தூலமான பொருளானது (மேலோட்டமான பொருள் எனலாம்), இலக்கண ரீதியில் ஆராயப்படும் தெளிவான பகுதி மற்றும் விகுதிகளால் அறியப்படுவதாகும் (இதனால் ஸர்வேச்வரனைக் குறித்து தான் தாழ்ந்து நின்று வணங்குதல், ப்ரபத்தியை அதன் அங்கங்களுடன் இயற்றுதல் என்பது தேறும்). அந்த வரிகளின் ஸூக்ஷ்ம பொருளானது (மறைந்துள்ள பொருள் எனலாம்), எழுத்துக்களுடைய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டுள்ள நிருக்தம் மூலம் அறியப்படுவதாகும் (இதனால் “நானும், எனக்குரியது என்று எண்ணப்படுபவையும் எனக்கு உரியவை அல்ல” என்பதும், “எனக்குச் சுதந்திரம் இல்லை” என்பதும் தேறும்). அந்த வரிகளின் மிகவும் உயர்ந்த பொருளானது இரகசியமான சாஸ்த்ரங்களில் கூறப்படும் பதங்களுடைய பொருள் மூலம் அறியப்படுவதாகும் (இதனால் ஸாத்தோபாயமான ப்ரபத்தி மூலம் அடையப்படும் பலன் ஸித்தோபாயமான ஸர்வேச்வரன் என்பது தேறும்).