Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 57)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்
மூலம் – இதி தே ஸூக்ஷ்ம உத்திஷ்ட: பரமந்யம் நிசாமய மந்தா நகார உத்திஷ்டோ ம: ப்ரதாந உதீர்யதே விஸர்க: பரமேசஸ்து தத்ரார்த்தேயம் நிருச்யதே அநாதி: பரமேசோ ய: சக்திமாந் புருஷோத்தம: தத்ப்ராப்தயே ப்ரதாநோயம் மந்தா நமந நாமவாந் இதி தே த்ரிவிதி: ப்ரோக்தோ நம: சப்தார்த்த ஈத்ருச:
– இதி தே ஸூக்ஷ்ம உத்திஷ்ட: பரமந்யம் நிசாமய மந்தா நகார உத்திஷ்டோ ம: ப்ரதாந உதீர்யதே விஸர்க: பரமேசஸ்து தத்ரார்த்தேயம் நிருச்யதே – இப்படியாக ஸூக்ஷ்மம் என்னும் பொருள் கூறப்பட்டது. “பரம்” என்னும் அடுத்த பொருளைக் கேட்பாயாக. “ந” என்பது உபாயத்தையும், “ம” என்பது முக்கியமானது என்பதையும், விஸர்க்கம் (:) என்பது ஸர்வேச்ரவனையும் குறிக்கும். அநாதி: பரமேசோ ய: சக்திமாந் புருஷோத்தம: தத்ப்ராப்தயே ப்ரதாநோயம் மந்தா நமந நாமவாந் இதி தே த்ரிவிதி: ப்ரோக்தோ நம: சப்தார்த்த ஈத்ருச: - எப்போதும் உள்ளவனாய் மிகவும் உயர்ந்த ஸர்வேச்வரனாய், சர்க்தி நிறைந்தவனாய் உள்ள புருஷோத்தமனை அடைவதற்கு “நமநம் (சரணாகதி)” என்பதே முக்கியமான உபாயம் ஆகும். இவ்விதம் “நம:” என்பதன் மூன்றுவிதமான அர்த்தங்கள் உனக்குக் கூறப்பட்டன.