Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 56)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்

மூலம் – பூர்ணமங்கைரூபாங்கைச்ச நமநம் தே ப்ரகீர்த்திதம் ஸ்தூலோயம் நமஸாஸ்த்வர்த்த: ஸூக்ஷ்மமந்யம் நிசாமய சேதநஸ்ய யதா ஸ்வஸ்மிந் ஸ்வீயே ச வஸ்துநி மம இத்யக்ஷர த்வந்த்வம் ததா மம்யஸ்ய வாசகம் அநாதிவாஸநாரூட மித்யாஜ்ஞாந நிபந்தநா ஆத்மாத்மீய பதார்த்தஸ்தா யா ஸ்வாதந்த்ர்யஸ்வதாமதி: மே நேத்யேவம் ஸமீசீந புத்தயா ஸாத்ர நிவார்யதே நாஹம் மம ஸ்வதந்த்ரோஹம் நாஸ்மீத்யஸ்யார்த்த உச்யதே ந மே தேஹாதிகம் வஸ்து ஸ சேஷ: பரமாத்மந: இதி புத்தயா நிவர்த்தந்தே தாஸ்தா: ஸ்வீயா மநீஷிகா: அநாதிவாஸநாஜாதை: போதைஸ்தைஸ்தைர் விகல்பிதை: ரூஷிதம் யத்த்ருடம் தத்தத் ஸ்வாதந்த்ர்ய ஸ்வத்வ தீமயம் தத்தத்வைஷ்ணவ ஸார்வாத்ம்ய ப்ரதிபோத ஸமுத்தயா நம இத்யேதயா வாசா நந்த்ரா ஸ்வஸ்மாதபோஹ்யதே

பூர்ணமங்கைரூபாங்கைச்ச நமநம் தே ப்ரகீர்த்திதம் ஸ்தூலோயம் நமஸாஸ்த்வர்த்த: ஸூக்ஷ்மமந்யம் நிசாமய – இவ்விதம் அங்கங்கள் மற்றும் அவற்றுக்கான விரோதிகளைச் செய்யாமல் உள்ளதான உபாயங்கள் ஆகியவற்றுடன் கூடிய சரணாகதி உனக்குக் கூறப்பட்டது. இதுவே “நம:” என்பதன் ஸ்தூலமான பொருளாகும். அடுத்து இதன் ஸூக்ஷ்மமான பொருளைக் குறித்துக் கேட்பாயாக. சேதநஸ்ய யதா ஸ்வஸ்மிந் ஸ்வீயே ச வஸ்துநி மம இத்யக்ஷர த்வந்த்வம் ததா மம்யஸ்ய வாசகம் – ஒரு சேதநன் எப்போது தன்னையும், தன்னைச் சேர்ந்தவற்றையும் “எனது” என்று எண்ணுகிறானோ அப்போது “மம” என்ற இரண்டு எழுத்துக்களும் மமகாரத்தைக் குறிக்கும். அநாதிவாஸநாரூட மித்யாஜ்ஞாந நிபந்தநா ஆத்மாத்மீய பதார்த்தஸ்தா யா ஸ்வாதந்த்ர்யஸ்வதாமதி: மே நேத்யேவம் ஸமீசீந புத்தயா ஸாத்ர நிவார்யதே - தன்னைக் குறித்து, தன்னுடைய உடைமைகள் குறித்தும் “நான் சுதந்திரமானவன், இந்தப் பொருள்கள் என்னுடையவை” என்னும் எண்ணம் எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து வரும் அறியாமையால் உண்டாகிறது. இந்த எண்ணமானது “மே ந” என்னும் ஞானத்தால் விலக்கப்படுகிறது. நாஹம் மம ஸ்வதந்த்ரோஹம் நாஸ்மீத்யஸ்யார்த்த உச்யதே – “மே ந” என்பதற்கு நான் சுதந்திரமானவன் அல்லன், நான் எனக்கு அடிமை அல்லன் என்று பொருள். ந மே தேஹாதிகம் வஸ்து ஸ சேஷ: பரமாத்மந: இதி புத்தயா நிவர்த்தந்தே தாஸ்தா: ஸ்வீயா மநீஷிகா: - “சரீரம் முதலானவை என்னுடையது அல்ல, அவை பரமாத்மாவுக்கு வசப்பட்டவை” என்னும் எண்ணம் காரணமாகவே “என்னுடையது” என்பதான அந்த எண்ணங்கள் நீக்கப்படுகின்றன. அநாதிவாஸநாஜாதை: போதைஸ்தைஸ்தைர் விகல்பிதை: ரூஷிதம் யத்த்ருடம் தத்தத் ஸ்வாதந்த்ர்ய ஸ்வத்வ தீமயம் – “நான் சுதந்திரமானவன், இவை அனைத்தும் என்னுடையவை” என்னும் எண்ணங்கள் எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ள எண்ணற்ற தீய வாஸனைகளால் வஸ்துக்களின் உண்மையான ஸ்வரூபத்துக்கு விரோதமாக உள்ள வேறுபட்ட எண்ணங்களால் உண்டாகிறது. தத்தத்வைஷ்ணவ ஸார்வாத்ம்ய ப்ரதிபோத ஸமுத்தயா நம இத்யேதயா வாசா நந்த்ரா ஸ்வஸ்மாதபோஹ்யதே – மேலே கூறிய எண்ணங்கள் “ஸர்வேச்வரன் அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளான்” என்னும் நல்ல அறிவுடன் “நம:” என்னும் பதம் கொண்டு ப்ரபத்தி பண்ணுகிறவனிடம் தன்னாலே விலகுகிறது.