Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 55)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்
மூலம் – ஏவம் பூதோப்யசக்த: ஸந் ந த்ராணம் பவிதும் க்ஷம: இதி புத்தாயாஸ்ய தேவஸ்ய கோப்த்ருசக்தி நிரூபணம் சதுர்த்தமங்கமுத்திஷ்டம் அமுஷ்ய வ்யாஹதி: புந: உதாஸீநோ குணபாவாத் இத்யுத்ப்ரேக்ஷா நிமித்தஜா ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம் ததங்கம் பஞ்சமம் ப்ரோக்தம் ஆஜ்ஞா வ்யாகாத வர்ஜநம் ஆசாஸ்த்ரீயோபஸேவா து தத்விகாத உதீர்யதே சராசராணி பூதாநி ஸர்வாணி பகவத்வபு: அதஸ்ததாநுகூல்யம் மே கார்யமித்யேவ நிச்சய: ஷஷ்டமங்கம் ஸமுத்திஷ்டம் தத்வ்யாகாதோ நிராக்ருதி:
ஏவம் பூதோப்யசக்த: ஸந் ந த்ராணம் பவிதும் க்ஷம: இதி புத்தாயாஸ்ய தேவஸ்ய கோப்த்ருசக்தி நிரூபணம் – இவ்விதம் அவன் இரக்கம் நிறைந்தவன் என்றாலும், அவனுக்குச் சக்தியில்லை என்பதால் நம்மை ரக்ஷிக்கமாட்டான் என்று எண்ணாமல் நம்மை ரக்ஷிப்பவன் அவனே என்று எண்ணியபடி, அவனை ரக்ஷிக்கவேண்டும் என்று விண்ணப்பித்தலே கோப்த்ருத்வ வரணம் என்னும் அங்கமாகும். சதுர்த்தமங்கமுத்திஷ்டம் அமுஷ்ய வ்யாஹதி: புந: உதாஸீநோ குணபாவாத் இத்யுத்ப்ரேக்ஷா நிமித்தஜா – இந்த கோப்த்ருத்வ வரணம் என்னும் நான்காவது அங்கத்தைச் சிந்திக்காமல், அவனுக்குக் குணம் இல்லாமையால் நம்மை ரக்ஷிக்காமல், உதாஸீனம் செய்வான் என்று எண்ணுதல் இந்த அங்கத்துக்கு விரோதியாகும். ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம் ததங்கம் பஞ்சமம் ப்ரோக்தம் ஆஜ்ஞா வ்யாகாத வர்ஜநம் – தான் தன்னுடைய எஜமானனாகிய ஸர்வேச்வரனுக்கு விருப்பம் அல்லாதவற்றைச் செய்யமாட்டேன் என்று இருத்தல் ப்ராதிகூல்ய வர்ஜனம் என்னும் ஐந்தாவது அங்கமாகும். ஆசாஸ்த்ரீயோபஸேவா து தத்விகாத உதீர்யதே சராசராணி பூதாநி ஸர்வாணி பகவத்வபு: - இந்த ப்ராதிகூல்ய வர்ஜனம் என்னும் அங்கத்துக்கு விரோதியாக உள்ளது எதுவென்றால் சாஸ்த்ரங்களுக்கு விரோதமாகச் செயல்களைச் செய்வதாகும். அனைத்து உயிர்களும் ஸர்வேச்வரனுடைய சரீரமாகும். அதஸ்ததாநுகூல்யம் மே கார்யமித்யேவ நிச்சய: ஷஷ்டமங்கம் ஸமுத்திஷ்டம் தத்வ்யாகாதோ நிராக்ருதி: - அதனால் (அனைத்தும் அவன் சரீரம் என்பதால்), அனைத்திற்கும் விருப்பமானவற்றையே செய்தல் வேண்டும் என்று இருத்தல் ஆறாவது அங்கமான ஆநுகூல்ய ஸங்கல்பம் ஆகும். உயிர்களுக்குத் தீமை செய்தல் இந்த அங்கத்துக்கு விரோதமாகும்.