Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 54)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்
மூலம் – இயம் கரணபூர்த்தி: ஸ்யாத் அங்கபூர்த்திமிமாம் ச்ருணு சாச்வதீ மம ஸம்ஸித்தி: இயம் ப்ரஹ்வீபவாமி யத் புருஷம் பரமுத்திச்ய ந மே ஸித்திரிதோந்யதா இத்யங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ அநாதிவாஸநாரோஹாத் அநைச்வர்யாத் ஸ்வபாவஜாத் மலாவகுண்டிதத்வாச்ச துஷ்க்ரியா விஹதிர்ஹி யா தத்கார்பண்யம் ததுத்போதோ த்விதீயம் ஹ்யங்கமித்ருசம் ஸ்வஸ்வாதந்த்ர்யாவபோதஸ்து தத்விரோத உதீர்யதே பரத்வே ஸதி தேவோயம் பூதாநாமநுகம்பந: அநுக்ரஹைகதீர் நித்யம் இத்யேதத்து த்ருதீயகம் உபேக்ஷகோ யதாகர்ம பலதாயீதி யா மதி: விச்வாஸாத்மகமேதத்து த்ருதீயம் ஹந்தி வை ஸதா
– இயம் கரணபூர்த்தி: ஸ்யாத் அங்கபூர்த்திமிமாம் ச்ருணு சாச்வதீ மம ஸம்ஸித்தி: இயம் ப்ரஹ்வீபவாமி யத் – இதுவரை பூர்ணமான ப்ரபத்தி குறித்து கூறப்பட்டது. இனி இந்த ப்ரபத்தியின் அங்கங்களுடைய பூர்த்தி குறித்து உரைப்பதைக் கேட்பாயாக. புருஷம் பரமுத்திச்ய ந மே ஸித்திரிதோந்யதா இத்யங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ – பரமபுருஷனாகிய ஸர்வேச்வரனைக் குறித்து நான் செய்யும் ப்ரபத்தி என்பதே எனக்கு உறுதியான பலனாகும். இதனைக் காட்டிலும் வேறு பலன் எனக்கு அவசியமில்லை என்று இருத்தல், சிறந்த அங்கமாகக் கூறப்படுகிறது. பலன் மீது ஆசை என்பது இந்த அங்கத்துக்கு விரோதியாகும். அநாதிவாஸநாரோஹாத் அநைச்வர்யாத் ஸ்வபாவஜாத் மலாவகுண்டிதத்வாச்ச துஷ்க்ரியா விஹதிர்ஹி யா – எல்லையற்ற தீயவாசனை உள்ளடக்கியதாலும், இயற்கையாகவே ஒருவனுக்கு உட்பட்டுள்ளதாலும், த்வேஷம் மற்றும் ஆசை முதலான தாழ்ந்தவற்றால் மனம் நிரம்பி உள்ளதாலும் அறிவு மற்றும் சக்தியானது பக்தியைச் செய்வதற்கு இயலாமல் தடைபடுகின்றன. இந்தத் தன்மையே ஆகிஞ்சந்யம் ஆகும். தத்கார்பண்யம் ததுத்போதோ த்விதீயம் ஹ்யங்கமித்ருசம் ஸ்வஸ்வாதந்த்ர்யாவபோதஸ்து தத்விரோத உதீர்யதே – இவ்விதம் உள்ளதான ஆகிஞ்சந்யம் நமக்கு உள்ளதை எப்போது எண்ணியபடி இருத்தலே கார்ப்பண்யம் என்னும் இரண்டாவது அங்கமாகும். இந்த அங்கத்துக்கு, “தான் ஸ்வதந்த்ரன்” என்னும் எண்ணம் தடையாகிறது. பரத்வே ஸதி தேவோயம் பூதாநாமநுகம்பந: அநுக்ரஹைகதீர் நித்யம் இத்யேதத்து த்ருதீயகம் – எம்பெருமான் மிகவும் உயர்ந்தவன் என்றாலும் அனைத்து உயிர்களிடமும் அன்புள்ளவன், எப்போதும் அனுக்ரஹம் செய்வதில் மட்டுமே சிந்தனை உள்ளவன் என்று எண்ணுவது மூன்றாவது அங்கமான மஹாவிச்வாஸம் ஆகும். உபேக்ஷகோ யதாகர்ம பலதாயீதி யா மதி: விச்வாஸாத்மகமேதத்து த்ருதீயம் ஹந்தி வை ஸதா – அவன் கர்மத்துக்கு ஏற்றபடி மட்டுமே பலன் அளிப்பான், நம்மை அவன் தள்ளிவிடுவான் போன்ற எண்ணங்கள் மஹாவிச்வாஸத்துக்குக் கெடுதல் உண்டாக்கும்.