Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 53)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்
மூலம் – இந்த நம: சப்தத்துக்கு ஸ்தூல ஸூக்ஷ்ம பரங்களென்று மூன்று அர்த்தங்களை வகுத்து அஹிர்புத்ந்யன் வ்யாக்யானம் பண்ணினான். ப்ரேக்ஷாவத: ப்ரவ்ருத்திர்யா ப்ரஹ்விபாவாத்மிகா ஸ்வத: உத்க்ருஷ்டம் பரமுதித்ச்ய தந்நம: பரிகீயதே லோகே சேதநவர்க்கஸ்து த்விதைவ பரிகீர்த்யதே ஜ்யாயாம்ச்சைவ ததா அஜ்யாயாந் நைவாப்யாம் வித்யதே பர: காலதோ குணதச்சைவ ப்ரகர்ஷோ யத்ர திஷ்டதி சப்தஸ்தம் முக்யயா வ்ருத்தயா ஜ்யாயாநித்யவலம்பதே அதச்சேதநவர்க்கோந்ய: ஸ்ம்ருத: ப்ரத்யவரோ புதை: அஜ்யாயாம்ச்சாநயோர்யோக: சேஷசேஷிதயேஷ்யதே அஜ்யாயாம்ஸோபரே ஸர்வே ஜ்யாயாநேகோ மத: பர: நந்த்ரு நந்தவ்ய பாவேந தேஷாம் தேந ஸமந்வய: நந்தவ்ய: பரம: சேஷீ சேஷா நந்தார ஈரிதா: நந்த்ரு நந்தவ்ய பாவோயம் ந ப்ரயோஜநபூர்வக: நீசோச்சயோ: ஸ்வபாவோயம் நந்த்ரு நந்தவ்யதாத்மக: உபாதிரஹிதேநாயம் யேந பாவேந சேதந: நமதி ஜ்யாயஸே தஸ்மை தத்வா நமநமுச்யதே பகவாந் மே பரோ நித்யம் அஹம் ப்ரத்யவர: ஸதா இதி பாவோ நம: ப்ரோக்தோ நமஸ: காரணம் ஹி ஸ: நாமயத்யாபி வா தேவம் ப்ரஹ்வீபாவயதி த்ருவம் ப்ரஹ்வீபவதி நோசே ஹி பரோ நைச்யம் விலோகயந் அதோ வா நம உத்திஷ்டம் யத்தம் நாமயதி ஸ்வயம் வாசா நம இதி ப்ரோச்ய மநஸா வபுஷா ச யத் தந்நம: பூர்ணமுத்திஷ்டம் அதோ அந்யந்ந்யூநமுச்யதே
– இப்படியாக உள்ள “நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் ஸ்தூலம், ஸூக்ஷ்மம் மற்றும் பரம் என்னும் மூன்று அர்த்தங்கள் கூறப்பட்டன. அவையாவன் அடுத்து உள்ள பல ச்லோகங்களில் கூறப்பட்டுள்ளன. ப்ரேக்ஷாவத: ப்ரவ்ருத்திர்யா ப்ரஹ்விபாவாத்மிகா ஸ்வத: உத்க்ருஷ்டம் பரமுதித்ச்ய தந்நம: பரிகீயதே – அறிவுள்ள ஒருவன் தன்னைக் காட்டிலும் உயர்ந்த ஒருவனைக் குறித்து எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் தானாகவே வணங்குவதாகிய சரீரத்தின் செயல்பாடு “நமஸ்” எனப்படுகிறது. லோகே சேதநவர்க்கஸ்து த்விதைவ பரிகீர்த்யதே ஜ்யாயாம்ச்சைவ ததா அஜ்யாயாந் நைவாப்யாம் வித்யதே பர: - சாஸ்த்ரங்களில் சேதநர்கள் அனைவரும் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்று இருவகைப்பட்டவர்களாக மட்டுமே கூறப்படுகிறார்கள்; வேறு விதங்கள் இல்லை. காலதோ குணதச்சைவ ப்ரகர்ஷோ யத்ர திஷ்டதி சப்தஸ்தம் முக்யயா வ்ருத்தயா ஜ்யாயாநித்யவலம்பதே – அந்த இருவரில் காலம் மற்றும் குணம் ஆகியவற்றால் மேன்மை உள்ளவன் மட்டுமே “உயர்ந்தவன்” என்னும் பொருள் தருகின்ற “ஜ்யாயாந்” என்னும் சொல்லின் பொருளாகிறான். ஸர்வேச்வரன் மட்டுமே இவ்விதம் நித்யமாயும், எங்கும் உள்ளவனாயும், அளவற்ற குணங்கள் கொண்டவனாக உள்ளதாலும் அவனே “ஜ்யாயாந்” எனப்படுகிறான். அதச்சேதநவர்க்கோந்ய: ஸ்ம்ருத: ப்ரத்யவரோ புதை: அஜ்யாயாம்ச்சாநயோர்யோக: சேஷசேஷிதயேஷ்யதே – அவனைத் தவிர்த்துள்ள மற்ற ஜீவாத்மாக்கள் அனைவரும் “தாழ்ந்தவர்கள்” என்னும் பொருள் தருகின்ற “அஜ்யாயாந்” எனப்படுகின்றனர். உயர்ந்த அவனுக்கும் தாழ்ந்த இவர்களுக்கும் இடையே உள்ள உறவு என்பது “எஜமானன் – அடிமை” என்பதான “சேஷி – சேஷ பாவம்” ஆகும். அஜ்யாயாம்ஸோபரே ஸர்வே ஜ்யாயாநேகோ மத: பர: நந்த்ரு நந்தவ்ய பாவேந தேஷாம் தேந ஸமந்வய: - அவன் ஒருவன் மட்டுமே உயர்ந்தவன் ஆவான், மற்ற அனைவரும் தாழ்ந்தவர்களே ஆவர். அவன் வணங்கப்படுபவனாகவும், இவர்கள் வணங்குபவர்களாவும் இருப்பதே அவனுடன் இவர்களுக்கு உள்ள உறவாகும். நந்தவ்ய: பரம: சேஷீ சேஷா நந்தார ஈரிதா: நந்த்ரு நந்தவ்ய பாவோயம் ந ப்ரயோஜநபூர்வக: - வணங்கப்படுபவன் “உயர்ந்தவன், சேஷி” என்று கூறப்படுகிறான். வணங்கும் மற்றவர்கள் “சேஷர்கள்” எனப்படுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள இந்த உறவுமுறையானது எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல், இயற்கையாகவே அமைந்துள்ளது. நீசோச்சயோ: ஸ்வபாவோயம் நந்த்ரு நந்தவ்யதாத்மக: உபாதிரஹிதேநாயம் யேந பாவேந சேதந: நமதி ஜ்யாயஸே தஸ்மை தத்வா நமநமுச்யதே – சேதநன் ஒருவன் உயர்ந்த அவனை எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் எவ்விதம் வணங்குகிறானோ, அத்தகைய நமஸ்காரம் என்பதற்கும், “அவனே சேஷி, நாம் சேஷன்” என்று எண்ணுவதற்கும் “நமநம்” என்று பெயர். பகவாந் மே பரோ நித்யம் அஹம் ப்ரத்யவர: ஸதா இதி பாவோ நம: ப்ரோக்தோ நமஸ: காரணம் ஹி ஸ: - “பகவான் எப்போதும் எனக்கு எஜமானன், நான் அவனுக்கு எப்போதும் அடிமை” என்றுள்ள எண்ணமே நமஸ் எனப்படுகிறது. இதன் காரணம், அத்தகைய எண்ணமே சரீரத்தால் செய்யப்படும் நமஸ்காரம் என்பதற்குக் காரணமாக உள்ளதால் ஆகும். நாமயத்யாபி வா தேவம் ப்ரஹ்வீபாவயதி த்ருவம் ப்ரஹ்வீபவதி நோசே ஹி பரோ நைச்யம் விலோகயந் – இத்தகைய நமஸ்காரம் என்பது ஸர்வேச்வரனை வணங்கும்படிச் செய்கிறது. வணங்குபவன் விண்ணப்பம் செய்வதை பகவான் அளிக்கும்படியாகச் செய்கிறது. இது உறுதியாகும். மிகவும் உயர்ந்த பகவான், தன்னிடம் தாழ்ந்து வணங்குபவர்களைக் கண்டு, தானும் அவர்களிடம் வணக்கம் உள்ளவனாகிறான். அதோ வா நம உத்திஷ்டம் யத்தம் நாமயதி ஸ்வயம் – ஆக, ஸர்வேச்வரனையும் வணங்கும்படிச் செய்வதால், இந்தச் செயல் “நமஸ்ஸு” எனப்படுகிறது. வாசா நம இதி ப்ரோச்ய மநஸா வபுஷா ச யத் - தந்நம: பூர்ணமுத்திஷ்டம் அதோ அந்யந்ந்யூநமுச்யதே – வாக்கு கொண்டு “நம” என்று உரைத்து, மனம் மூலம் இதனை எண்ணியபடி இருந்து, சரீரத்தால் வணங்குவதே பரிபூர்ணமான நமஸ் ஆகும். இதனைத் தவிரச் செய்யப்படுவது குறையுடன் கூடிய நமஸ் ஆகும்.