Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 52)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
நம: என்பதன் மூலம் உபாயம் மற்றும் பரஸமர்ப்பணம் கிட்டுதல்
மூலம் – ய: ஸ தேவோ மயா த்ருஷ்ட: புரா பத்மாயதேக்ஷண: ஸ ஏவ புருஷவ்யாக்ர ஸம்பந்தீ தே ஜநார்த்தந: ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா: என்று உபதேசிக்க, ஏவமுக்தாஸ்த்ரய: பார்த்தா யமௌ ச பரதர்ஷப த்ரௌபத்யா ஸஹிதா: ஸர்வே நமச்சக்ருர்ஜநார்த்தநம் என்று சொல்லுகையாலும், தமயந்தீ வ்ருத்தாந்தத்திலே “சரணம் ப்ரதி தேவாநாம் ப்ராப்தகாலமமந்யத” என்று உபக்ரமித்து, “வாசா ச மநஸா சைவ நமஸ்காரம் ப்ரயுஜ்ய ஸா” என்கையாலும், நம: சப்தம்தானே சரணாகதிசப்த ஸ்தாநத்திலே படிதமாகையாலே இது தன்னோடு தன் துவக்கறுத்துக் கொண்டு ஸபரிகரமான ஸ்வரக்ஷா பரஸமர்ப்பணத்திலே தத்பரமாகவுமாம். நமஸ்ஸு ஆத்ம ஸமர்ப்பணபரமாயிருக்கு மென்னுமிடம், ஸமித்ஸாதநகாதீநாம் யஜ்ஞாநாம் ந்யாஸமாத்மந: நமஸா ய: அகரோத்தேவ ஸ ஸ்வத்வர இதீரித: நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்மநிவேதநம் இத்யாதிகளாலும் ப்ரஸித்தம். “நானும் எனக்குரியேனல்லேன், என்னுடையதான வ்யாபாராதிகளும் எனக்குச் சேஷமன்று, இவையெல்லாம் ஸர்வேச்வரனுக்கே சேஷம்” என்றிவை முதலான அர்த்தங்களெல்லாம் நம: சப்தத்திலே விவக்ஷிதமென்னுமிடம் நிருக்தத்தில் நமஸ்கார ப்ரகரணத்திலே ஓதப்பட்டது.
– “நம:” என்னும் சப்தம் “காப்பாற்றுதலுக்கான ப்ரார்த்தனை” என்பதைக் கீழே உள்ள வரிகளில் காணலாம்: மஹாபாரதம் வனபர்வம் (161-50) - ய: ஸ தேவோ மயா த்ருஷ்ட: புரா பத்மாயதேக்ஷண: ஸ ஏவ புருஷவ்யாக்ர ஸம்பந்தீ தே ஜநார்த்தந: - மார்க்கண்டேயர் பாண்டவர்களிடம், “புருஷர்களில் உயர்ந்தவனே! தாமரையின் இதழ் போன்று விரிந்த திருக்கண்கள் கொண்ட எந்தவொரு ஸர்வேச்வரன், அனைத்து ஸமுத்திரத்தால் சூழப்பட்டபோது என்னால் பார்க்கப்பட்டானோ, ஜனார்த்தனனாகிய அவன் உனக்கு ஸம்பந்தம் உள்ளவன் ஆகிறான்” என்றார். மஹாபாரதம் வனபர்வம் (161-50) - ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா: - மஹாலக்ஷ்மியின் நாதனாகிய ஸர்வேச்வரன் அனைத்து லோகங்களுக்கும் தந்தையாகவும் தாயாகவும் உள்ளான். புருஷர்களின் உயர்ந்த பாண்டவர்களே! அனைத்திற்கும் ரக்ஷகனான அவனை மட்டுமே உபாயமாகக் கொண்டு அவனிடம் சரணாகதி செய்யுங்கள். மஹாபாரதம் வனபர்வம் (161-36) - ஏவமுக்தாஸ்த்ரய: பார்த்தா யமௌ ச பரதர்ஷப த்ரௌபத்யா ஸஹிதா: ஸர்வே நமச்சக்ருர்ஜநார்த்தநம் – மார்க்கண்டேயரால் உபதேசிக்கப்பட்ட குந்தியின் புத்திரர்கள் மூவரும் நகுல ஸஹாதேவர்களுடனும், திரௌபதியுடனும் சேர்ந்து க்ருஷ்ணனைச் சரணம் அடைந்தார்கள். இதே போன்று மஹாபாரதம் வனபர்வத்தில் (48-15) உள்ள தமயந்தீ சரிதத்தில் - சரணம் ப்ரதி தேவாநாம் ப்ராப்தகாலமமந்யத – தேவர்களைக் குறித்துச் சரணாகதி செய்யவேண்டிய காலம் வந்தது என்று தமயந்தி எண்ணினாள் – என்று தொடங்கி, வாசா ச மநஸா சைவ நமஸ்காரம் ப்ரயுஜ்ய ஸா – ஆகவே அவள் வாக்காலும் மனதாலும் பல நமஸ்காரங்களைச் செய்து – என்று கூறியது காண்க. ஆக “நம:” என்னும் சப்தம் “காப்பாற்றுதலுக்கான ப்ரார்த்தனை” என்பதால், ஜீவாத்மா தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள இயலாதவன் என்பதையும், “ந மம பார: - நான் எனது பாரத்தைச் சுமக்கவல்லவன் அல்லன்” என்பதையும் தெளிவாக்குகிறது. கீழே உள்ள இரண்டு வரிகளின் மூலம், “நம:” என்பது ஸர்வேச்வரனுக்குச் செய்யப்படும் ஆத்மஸமர்ப்பணம் என்பதைத் தெளிவாக்குகிறது: அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-37) - ஸமித்ஸாதநகாதீநாம் யஜ்ஞாநாம் ந்யாஸமாத்மந: நமஸா ய: அகரோத்தேவ ஸ ஸ்வத்வர இதீரித: - ஸமித்து முதலானவை கொண்டு இயற்றப்படும் யஜ்ஞங்களில், ஸர்வேச்வரனுக்கு “நம:” என்பதன் மூலம் ஆத்ம ஸமர்ப்பணம் செய்தவன் மிகவும் உயர்ந்த யஜ்ஞம் செய்தவன் ஆகிறான். மந்த்ரராஜபதம் - நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்மநிவேதநம் – நமஸ்காரம் என்னும் ஆத்ம ஸமர்ப்பணத்தை யார் ஒருவனிடம் செய்து. நிருக்தியில் உள்ள நமஸ்காரப் பகுதியில், கீழே உள்ள பலவும் “நம:” என்னும் சப்தத்தால் வெளிப்படுகின்றன என்று கூறுவது காண்க: நான் எனக்கு உரியவன் அல்லன் நான் செய்யும் செயல்கள் எதற்கும் நான் எஜமானன் அல்லன் அல்லது அந்தச் செயல்கள் எனக்கு அடிமை அல்ல இவை அனைத்தும் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமையாகும்