Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 48)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
தாஸ்யமைச்வர்யோகேந ஜ்ஞாதீநாம் ச கரோப்யஹம் அர்த்தபோக்தா ச போகாநாம் வாக்துரிக்தாநி ச க்ஷமே
– க்ருஷ்ணன் கூறுவது, “ஈச்வரனுடைய ஸ்வபாவமாக உள்ள சுதந்திரம் என்பதன் தொடர்பு காரணமாக நான் எனது பக்தர்களுக்குத் தொண்டு செய்கிறேன். எனது இன்பங்களில் ஒரு பகுதியை நான் அனுபவித்து, மற்ற பகுதியை அவர்களுக்கு அளிக்கிறேன். அவர்களுடைய வாயால் கூறப்படும் கடுமையான சொற்களையும் நான் பொறுத்துக் கொள்கிறேன்”, என்பதாகும்.