Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 46)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ஸ்வேச்சயைவ பரேசாஸ்ய தாததீந்ய பலாத்து ந: பகவத்பக்த சேஷத்வம் ஸ்வேச்சயாபி க்வசித் பவேத்
– உயர்ந்த இந்த்ரன் போன்றவர்களுக்கு ஈச்வரனாக உள்ள ஸர்வேச்வரனுக்கு தனது அடியார்களுக்கு தான் அடிமையாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம் அவனுடைய விருப்பத்தால் ஏற்படுகிறது. ஆனால் அவனுடைய அடியார்களுக்கு நாம் அடிமையாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம், நாம் அவனுக்கு வசப்பட்டுள்ளதால் உண்டாகிறது. ஆனால் சில நேரங்களில் அது போன்று நம்முடைய விருப்பத்தாலும் உண்டாகும்.