Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 44)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூலம் – லோகத்தில் ஸ்வாமித்ம ஸ்வாதந்த்ர்யங்கள் அபிமதங்களாயும், தாஸத்வ பாரதந்த்ர்யங்கள் அநபிமதங்களாயும் தோற்றுகிறது கர்மோபாதிகமாகவத்தனை. இங்கு ப்ரணவ நமஸ்ஸுக்களிலே சொன்ன தாஸத்வமும் பாரதந்த்ர்யமும் தாஸபூதா: ஸ்வத: ஸர்வே இத்யாதிகளிற்படியே ஸ்வரூப ப்ராப்தங்களாகையாலே தத்வ வித்துக்களுக்கு அநுகூலங்கள்.
– இந்த உலகில் எஜமானனாக உள்ள தன்மை, மற்றவர்களுக்குக் கட்டுப்படாமல் உள்ள தன்மை ஆகிய இரண்டும் பொதுவாக விரும்பப்படுகிறது; அடிமையாக உள்ள தன்மை, மற்றவர்களுக்கு அடங்கி நடக்கும் நிலை ஆகிய இரண்டும் பொதுவாக விரும்பப்படுவதில்லை. இவ்விதம் உள்ள நிலை பூர்வகர்மங்களால் ஆகும். ஆனால் ப்ரணவம் மற்றும் “நம:” என்பதால் கூறப்படும் ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள நிலை, அவனுக்கு வசப்பட்டு இருத்தல் ஆகிய நிலை இரண்டும், ஈச்வர ஸம்ஹிதையில் - தாஸபூதா: ஸ்வத: ஸர்வே – நாம் அனைவரும் இயல்பாகவே அவனுக்கு அடிமைகள் – என்று கூறுவதற்கு ஏற்ப ஆத்ம ஸ்வரூபத்தை ஒட்டி உள்ளதால், உண்மையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்களுக்கு ஏற்புடையவே ஆகும்.