Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 42)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ஸ்ரீமாந் ஸ்வதந்த்ர: ஸ்வாமீ ச ஸர்வத்ராந்யாநபேக்ஷயா நிரபேக்ஷ ஸ்வதந்த்ரத்வம் ஸ்வாப்யம் சாந்யஸ்ய ந க்வசித்
– பெரியபிராட்டியின் நாயகனான ஸர்வேச்வரன் அனைத்து வஸ்துக்களிலும், மற்ற யாரையும் நாட வேண்டிய அவசியம் இல்லாமல் சுதந்திரமாகவும், எஜமானனாகவும் உள்ளான். வேறு யாருக்கும் எந்த விஷயத்திலும் மற்ற யாரையும் நாட வேண்டிய அவசியம் இல்லாமல் சுதந்திரமாகவும், எஜமானனாகவும் இருக்கும் நிலை இல்லை.