Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 28)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
அகாரேணோச்யதே விஷ்ணு: ஸர்வலோகேச்வரோ ஹரி: உத்த்ருதா விஷ்ணுநா லக்ஷ்மீ: உகாரேணோச்யதே ததா மகாராஸ்து தயோர்தாஸ இதி ப்ரணவ லக்ஷணம்
– “அ” என்பதன் மூலம் அனைத்து லோகங்களுக்கும் ஈச்வரனாகிய விஷ்ணு கூறப்படுகிறான்; “உ” என்பதன் மூலம் ஸர்வேச்வரனால் எப்போதும் தாங்கப்படும் லக்ஷ்மீ கூறப்படுகிறாள்; “ம” என்பதன் மூலம் இவர்கள் இருவருக்கும் ஜீவாத்மா அடிமை என்று கூறப்படுகிறான்; இதுவே ப்ரணவத்தின் கருத்து). கட ச்ருதியில் மக்ஷாலக்ஷ்மியைக் குறிக்கும் நடு எழுத்தான “ம” என்பதை நோக்கினால், ஜீவாத்மா இருவருக்கும் அடிமை என்பது தெளிவாகிறது. அடிமைத்தனம் என்பது தனக்காக எதனையும் எதிர்நோக்கி இராமல், மற்றவர்களுக்காக இருப்பதாகும். இதனை ஸ்ரீபாஷ்யகாரர் தன்னுடைய வேதார்த்த ஸங்க்ரஹத்தில் - பரகதாதிசயாதாநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ:, பர: சேஷீ – மற்றவர்களுக்கு ஓர் அதிசயத்தை உண்டாக்கவேண்டும் என்னும் ஆசை காரணமாக ஏற்கத்தக்கதாக உள்ள நிலை என்பது எந்த ஒரு வஸ்துவின் ஸ்வரூபமோ அதே சேஷம், அந்த அதிசயத்தை அடைபவன் சேஷீ – என்றது காண்க.