Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 27)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திவ்யதம்பதிகள் இருவரும் அனைவருக்கும் எஜமானர்கள்

மூலம் – இப்படி ஈச்வரன் ஸர்வசேஷியாம்போது, அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிரூபயாத்மிகா இதி ச்ருதிரஸ்ஸித்தம் மச்சாஸ்த்ரேஷ்வபி மாநத என்றும், உபயாதிஷ்டாநம் சைகம் சேஷித்வம் என்றும் சொல்லுகிறபடியே ஸபத்நீகனாயிருக்கும். அக்நீஷோமீயாதிகளிற்போலே ஆத்ம ஹவிருத்தேச்ய தேவதாத்வம் இருவர்க்கும் கூடவென்று தோற்றுகைக்காக சேஷிகள் இருவராயிருக்க சேஷித்வமேகமென்கிறது. மத்யமாக்ஷரத்தை லக்ஷ்மீவாசகமாகச் சொல்லுகிற கடச்ருதி வாக்யத்தைப் பராமர்சித்தால் இருவரையும் பற்ற இவ்வாத்மா சேஷமென்னுமிடம் சாப்தம். சேஷத்வமாவது தனக்கு ஓர் உபகாரத்தைப் ப்ராதாநமாகப் பற்றலன்றிக்கே பரோபகாரார்ஹமாகை. இத்தை “பரகதாதிசயாதாநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ:, பர: சேஷீ” என்று ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்தார்.

– இப்படியாக ஸர்வேச்வரன் அனைத்திற்கும் எஜமானனாக உள்ளபோது, கீழே உள்ள வாக்கியங்களின்படி, அவன் தன்னுடைய பத்னியுடன் சேர்ந்தே அவ்விதமாக இருப்பான்: விஷ்வக்ஸேந ஸம்ஹிதை - அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிரூபயாத்மிகா இதி ச்ருதிரஸ்ஸித்தம் மச்சாஸ்த்ரேஷ்வபி மாநத – இரண்டுவிதமான விபூதிகளும் எனக்கும், பிராட்டிக்கும் அடிமையானது என்று அனைத்து வேதாந்தங்களும், பாஞ்சராத்ரமும் கூறுகின்றன உபயாதிஷ்டாநம் சைகம் சேஷித்வம் – எஜமானத்தன்மை என்பது இருவரிடமும் உள்ளது அக்நீஷோமீய யாகத்தில் அவிர்பாகம் என்பது ஸோமன் மற்றும் அக்னி ஆகிய இருவருக்கும் தனித்தனியே அல்ல, இருவருக்கும் சேர்ந்தே அளிக்கப்படுகிறது; அதே போன்று, ஆத்மஸமர்ப்பணம் என்பது ஸர்வேச்வரனுக்கும் பெரியபிராட்டிக்கும் சேர்ந்தே செய்யப்படுகிறது. (அடுத்து கட ச்ருதி வாக்கியம் ஒன்றைக் கூறுகிறார். அந்த வாக்கியம்: