Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 26)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
நிச்சிதே பரசேஷத்வே சேஷம் ஸம்பரிபூர்யதே அநிச்சிதே புநஸ்தஸ்மிந் அந்யத் ஸர்வமஸத்ஸமம்
– ஸர்வேச்வரனுக்கு அடிமை என்னும் நிலை நிச்சயிக்கப்பட்டிருந்தால், சாந்தி முதலானவை நன்றாகப் பூர்த்தியாகும். இத்தகைய ஸம்பந்தம் இல்லையென்றால், அனைத்தும் இருந்தாலும், இல்லாமல் இருத்தல் என்னும் நிலைக்குச் சமமே ஆகும்.