Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 23)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தில் உள்ள “அ” என்னும் எழுத்து பிராட்டியையும் கூறுதல்
மூலம் – இப்படி நாராயணசப்தத்திலும் பத்நீஸம்பந்தம் அநுஸந்தேயம். இப்பத்நீ ஸம்பந்தம் த்வயத்திலே கண்டோக்தம். த்வய விவரணமான கத்யத்தில் ப்ரதமத்தில் பகவந் நாராயண என்று தொடங்கிச் சொல்லச் செய்தே நாரவர்க்கத்தின் நடுவே இவளைச் சொல்லிற்றும் பத்நீத்வ நிபந்தனமான பதி பாரார்த்யத்தாலும் “நர ஸம்பந்திநோ நாரா:” என்கிற வ்யுத்பத்தியாலும் ஆகக்கடவது.
– திருமந்த்ரத்தில் உள்ள “நாராயண” என்னும் பதத்திலும் மஹாலக்ஷ்மியுடனான ஸம்பந்தத்தை எண்ணியபடி இருக்கவேண்டும். இதே கருத்து த்வய மந்த்ரத்தில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறப்பட்டுள்ளது. த்வய மந்த்ரத்தை விவரிப்பதான எம்பெருமானாரின் சரணாகதிகத்யத்தின் தொடக்கத்தில் - பகவந் நாராயண – என்றுள்ள பகுதியில் நார வர்க்கத்தில் (ஜீவர்கள்) மஹாலக்ஷ்மியைச் சேர்த்தார் என்றுள்ள வ்யாக்யானங்கள் உண்மையே. ஆனால் இங்கு பிராட்டி ஜீவாத்மா என்னும் பொருளில் இவ்விதம் சேர்க்கப்படவில்லை. அவள் தனது கணவனுக்குக் கட்டுப்பட்டவள் என்று வெளிப்படுத்தும் விதத்திலும், நர ஸம்பந்திநோ நாரா: - நாரர்களுடன் தொடர்புள்ள – என்பதான விதத்திலும் மட்டுமே இங்கு கூறப்பட்டது.