Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 21)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
அதற்கு “காத்தல்” என்று பொருள் உள்ளதும்
மூலம் – இப்படி ஸ்வாபாவிகமான ரக்ஷகத்வம் ப்ராதிகூல்யம் நடக்கும் காலத்தில் அநாத்யபராதத்தாலே பிறந்த நிக்ரஹரூபோபாதியாலே ப்ரதிபத்தமாம். ப்ரதிபந்தமான இவ்வுபாதியைக் கழிக்கைக்காகவே ப்ரபத்தி முதலான வ்யாஜங்கள் சாஸ்த்ரஸித்தங்கள். த்ராணே ஸ்வாமித்வமௌசித்யம் ந்யாஸாத்யா: ஸஹகாரிண: ப்ரதாநஹேது: ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா கருணா விபோ:
– ஆனால் இப்படி அவனுக்கு இயல்பாகவே உள்ளதான காப்பாற்றும் தன்மை என்பது, எல்லையற்ற காலமாக ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ளவர்கள், அவனுக்கு விருப்பம் இல்லாத செயல்களைச் செய்தபடி உள்ளதால் தண்டனை பெறவேண்டிய அவசியம் உள்ளவர்களாக இருப்பதால், தடுக்கப்பட்டதாகவே இருக்கிறது. இவ்விதமாக ஸர்வேச்வரனுடைய கருணையைத் தடுப்பதான இந்த நிலைகளை நீக்கும்விதமாகவே சாஸ்த்ரங்கள் ப்ரபத்தி முதலான உபாயங்களைக் கூறுகின்றன. த்ராணே ஸ்வாமித்வமௌசித்யம் ந்யாஸாத்யா: ஸஹகாரிண: ப்ரதாநஹேது: ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா கருணா விபோ: - ஸ்வாமியாக இருத்தல் என்னும் நிலை காப்பாற்றுவதில் பொருந்துகிறது, ப்ரபத்தி முதலானவை உதவுவதற்கான காரணங்களாக உள்ளன, ஸர்வேச்வரனுடைய சுதந்திரத்தோடு கூடிய தயை என்பதே முக்கியமான காரணம் ஆகும்.