Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 20)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

அதற்கு “காத்தல்” என்று பொருள் உள்ளதும்

மூலம் – இந்த ரக்ஷகத்வம் அவச்சேதகமில்லாமையாலே ஸர்வ விஷயம். ரக்ஷா ப்ரகாரங்கள் விஷயங்கள்தோறும் ப்ரமாணங்கள் காட்டினபடியிலே விசித்திரங்களாய் இருக்கும். இது ஹேது நிர்த்தேசம் பண்ணாமையாலே நிருபாதிகமாய்த் தோன்றினாலும் ஸாபராதரான ஸம்ஸாரிகளுக்கு மோக்ஷாதிப்ரதாநத்தில் ஸ்வதந்த்ரனான ஈச்வரன் தான் ஸங்கல்பித்து வைத்ததொரு வ்யாஜத்தை அபேக்ஷித்திருக்கும். நித்யர் பக்கலிலும் முக்தர் பக்கலிலும் நிருபாதிக ஸஹஜ காருண்யமாத்ரத்தாலே ஸ்திதஸ்தாபநரூபேண ரக்ஷை முழுக்க நடக்கும்.

– இப்படிப்பட்ட ரக்ஷகத்தன்மை என்பதை வரையறை செய்யும் எந்தவிதமான ப்ரமாணமும் இல்லாத காரணத்தால், இது அனைவருக்கும் பொதுவானதே ஆகும். ஆனால் காக்கப்படுகின்ற (அல்லது காப்பாற்றப்படவேண்டிய) வஸ்துக்களுக்கு ஏற்றபடி இந்த ரக்ஷகத்தன்மையானது பலவிதங்களில் இருக்கலாம் என்று ப்ரமாணங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட காப்பாறுதல் என்பது “இன்ன காரணத்தால்” என்று கூறப்படாததால் அது “காரணம் பற்றி வருதல் இல்லை” என்று கொள்ளப்பட்டாலும், சுதந்திரமானவனான ஸர்வேச்வரன், தான் ஏற்படுத்தியுள்ள விதத்தில் ஜீவன் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்; காரணம் ஸம்ஸாரத்திலிருந்து மோக்ஷம் அளிப்பதற்கு ஒரு வலுவான காரணம் வேண்டும் அல்லவோ? ஆனால் நித்யஸூரிகள் விஷயத்திலும், முக்தி பெற்றவர்கள் விஷயத்திலும் இப்படிப்பட்ட “காரணம் இல்லாமல் காப்பாற்றுதல்” என்னும் நிலை ஸர்வேச்வரனுடைய கருணையால், முன்பே ஏற்படுத்திய நிலை என்பதைக் காக்கும்விதமாக, எப்போதும் நடக்கும்.