Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 17)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தைப் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டிய முறை
மூலம் – இப் ப்ரணவார்த்தாநுஸந்தாந க்ரமத்தை ஈத்ருச: பரமாத்மா அயம் ப்ரத்யகாத்மா ததேத்ருச: தத் ஸம்பந்தாநுஸந்தாநம் இதி யோக: ப்ரகீர்த்தித: என்று ஸ்ரீசாண்டில்யபகவான் அருளிச்செய்தான். இத்தை அகாரார்த்தோ விஷ்ணுர்ஜகதுதய ரக்ஷா ப்ரளயக்ருத் மகாரார்த்தோ ஜீவஸ்ததுபகரணம் வைஷ்ணவமிதம் உகாரோ அநந்யார்ஹம் நியமயதி ஸம்பந்தமநயோ: த்ரயீஸாரஸ்த்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் ஸமதிசத் என்று விவரித்தார்கள். “கண்ணபுரமென்று உடையானுக்கு அடியேன், ஒருவருக்கு உரியேனோ?” என்றதும் இப் ப்ரணவார்த்த விவரணம். ப்ரணவத்தில் அக்ஷரத்ரயத்தையும் வேதத்ரயஸாரமாக ச்ருதி ஸ்ம்ருதிகள் ப்ரபஞ்சித்தன.
– ப்ரணவத்தின் ஆழ்பொருளை எவ்விதம் அறியவேண்டும் என்று ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி சாண்டில்ய ஸ்ம்ருதியில் (5-17) - ஈத்ருச: பரமாத்மா அயம் ப்ரத்யகாத்மா ததேத்ருச: தத் ஸம்பந்தாநுஸந்தாநம் இதி யோக: ப்ரகீர்த்தித: - பரமாத்மா இப்படிப்பட்டவன், ஜீவாத்மா இப்படிப்பட்டவன் என்று இவர்கள் இருவருடைய தொடர்பு குறித்து எண்ணுதல் யோகம் எனப்படும் – என்றது காண்க. அஷ்டச்லோகியில் (1) - அகாரார்த்தோ விஷ்ணுர்ஜகதுதய ரக்ஷா ப்ரளயக்ருத் மகாரார்த்தோ ஜீவஸ்ததுபகரணம் வைஷ்ணவமிதம் உகாரோ அநந்யார்ஹம் நியமயதி ஸம்பந்தமநயோ: த்ரயீஸாரஸ்த்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் ஸமதிசத் – இந்த உலகைப் படைத்து, காத்து, அழிப்பவனாகிய மஹாவிஷ்ணு “அ” என்பதன் பொருளாவான். “ம” என்பது ஜீவனாகும்; அவன் விஷ்ணுவின் அடிமையாகிறான். இந்த இருவருக்கும் இடையே உள்ள ஸம்பந்தம் வேறு யாருக்கும் உரியது அல்ல என்று கூறுவது “உ” என்பதாகும். ஆக மூன்று வேதங்களின் ஸாரமாகவும், மூன்று எழுத்துக்களைக் கொண்டதாகவும் உள்ள ப்ரணவம் இந்தப் பொருளை உரைக்கிறது. பெரியதிருமொழி (8-9-3) - கண்ணபுரமென்று உடையானுக்கு அடியேன், ஒருவருக்கு உரியேனோ? – திருக்கண்ணபுரத்தில் உறையும் ஸர்வேச்வரனுக்கு அடிமையாகிய நான், வேறு யாருக்கும் அடிமை ஆவேனோ – என்று கூறுதல் ப்ரணவத்தின் இந்தக் கருத்துக்கு விளக்கமாகும். ப்ரணவத்தில் மூன்று எழுத்துக்கள் உள்ளதையும், அது மூன்று வேதங்களுடைய ஸாரமாக உள்ளதையும் ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் பரக்க உரைத்தன. “அ” என்பது ஸர்வேச்வரனைக் கூறுதலும்,