Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 16)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

ப்ரணவத்தின் பெருமை மற்றும் பலவிதமான அர்த்தங்களும்

மூலம் – க்ஷேத்ரஜ்ஞஸ்யேச்வரஜ்ஞாநாத் விசுத்தி: பரமா மதா என்றது, சேஷிதத்த்வ ஜ்ஞாநமாத்ரபரமானபோது உபாயாநர்ஹதா நிவ்ருத்திபரம். உபாயரூபம் ஜ்ஞாநாநந்தரத்தை விவக்ஷிக்கும்போது மோக்ஷபரம்.

– யஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி (3-34) - க்ஷேத்ரஜ்ஞஸ்யேச்வரஜ்ஞாநாத் விசுத்தி: பரமா மதா – ஈச்வரனைக் குறித்த ஞானம் காரணமாக பந்தப்பட்ட ஜீவனுக்கு மிகவும் உயர்ந்த தூய்மை கிட்டுகிறது – என்று கூறப்பட்டதன் பொருள் என்னவென்றால், ப்ரணவமானது எஜமானன் – அடிமை என்னும் ஞானத்தை உண்டாக்குகிறது என்று கொள்ளும்போது உபாயத்தைக் கைக்கொள்வதற்குத் தகுதியின்மையை உண்டாக்கவல்ல அசுத்தத்தை விலக்குகிறது என்பதாகும். ஆனால் ப்ரணவமானது உபாயமாக உள்ள ஸர்வேச்வரனைக் குறித்த ஞானத்தை உண்டாக்குகிறது என்னும்போது, பரிசுத்தி என்பது மோக்ஷத்தைக் குறிக்கும்.