Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 15)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தின் பெருமை மற்றும் பலவிதமான அர்த்தங்களும்
மூலம் – இதின் ப்ரபாவம் ஆத்யம் து த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யத்ர ப்ரதிஷ்டிதா ஸ குஹ்யோந்யஸ்த்ரி வ்ருத்வேதோ யஸ்தம் வேத ஸ வேதவித் இத்யாதிகளிலே ப்ரஸித்தம். இது ஹவிர்க்ருஹீத்வா ஆத்மரூபம் வஸுரண்யேதி மந்த்ரத: ஜுஹுயாத் ப்ரணவேநாக்நௌ அச்யுதாக்யே ஸநாதநே என்கிறபடியே ந்யாஸவித்யையில் ஸ்வதந்த்ரமாய் ஆத்மஸமர்ப்பண பரமாயிருக்கும். அக்கட்டளையில் இங்கும் ஸமர்ப்பணபரமாகவும் யோஜிப்பார்கள். இவ்விடத்தில் ஸ்வரூபஜ்ஞாந ப்ராதாந்யத்தாலே சேஷத்வாநுஸந்தாநமாத்ரம் உபஜீவ்யமென்றும் யோஜிப்பார்கள். அப்போது இச்சேஷத்வாநுஸந்தாநம் அதிகாரத்திலே சேரும்.
– ப்ரணவத்தின் மேன்மையானது, மநுஸ்ம்ருதி (11-265) - ஆத்யம் து த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யத்ர ப்ரதிஷ்டிதா ஸ குஹ்யோந்யஸ்த்ரி வ்ருத்வேதோ யஸ்தம் வேத ஸ வேதவித் – மூன்று எழுத்து கொண்டதான ப்ரணவம் என்பது அனைத்து வேதங்களுக்கும் முதலாவதாக உள்ளது; அதில் அனைத்து வேதங்களின் கருத்தும் அடங்கியுள்ளது; இந்த ப்ரணவம் என்னும் வேதமானது, அனைத்து வேதங்களைக் காட்டிலும் மேன்மையானது; இதனை சூத்திரர்களும் பெண்களும் அறியாதபடி காக்கவேண்டும்; இதனை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் – போன்ற வரிகளின் மூலம் தெளிவாகிறது. மேலும், இத்தகைய ப்ரணவமானது, தனித்தே, வஸுரண்ய மந்த்ரத்தில் – ஆத்மஸமர்ப்பணபர – ஆத்மாவை ப்ரணவம் மூலம் ப்ரஹ்மத்திடம் சேர்க்கவேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளது என்பதை ந்யாஸவித்யையில் - ஹவிர்க்ருஹீத்வா ஆத்மரூபம் வஸுரண்யேதி மந்த்ரத: ஜுஹுயாத் ப்ரணவேநாக்நௌ அச்யுதாக்யே ஸநாதநே – ஆத்மா என்னும் அவிர்பாகத்தை, “வஸுரண்ய” என்னும் மந்த்ரம் கொண்டு, எப்போதும் எரிந்தபடி உள்ள அச்சுதன் என்னும் அக்னியில், ப்ரணவத்தால் ஹோமம் செய்யவேண்டும் – என்றது காண்க. இதன் காரணமாக, ப்ரணவம் என்பது ஸமர்ப்பணத்தைக் குறிப்பதாகவும் கொள்வர். ஒரு சிலர், திருமந்த்ரம் மூலமே ஆத்மா அடிமை என்றும், ஸர்வேச்வரன் எஜமானன் என்றும் உள்ள சேஷ-சேஷி ஞானத்தை அடைவதால், ப்ரணவமானது திருமந்த்ரத்துடன் மட்டுமே அங்கீகரிக்கத்தக்கது என்று கூறுவர். இவ்விதம் கொண்டால், ப்ரணவமானது, உபாய அதிகாரத்தில் அடங்கி விடுகிறது.