Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 12)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தில் அனைவருக்கும் உள்ள அதிகாரமும் வரையறையும்
மூலம் – வைதிகம் தாந்த்ரிகம் சைவ ததா வைதிகதாந்த்ரிகம் த்ரிவிதம் கர்ம ஸம்ப்ரோக்தம் பஞ்சராத்ராம்ருதார்ணவே வைதிகம்ப்ராஹ்மணாநாம் து ராஜ்ஞாம் வைதிகதாந்த்ரிகம் தாந்த்ரிகம் வைச்யசூத்ராணாம் ஸர்வேஷாம் தாந்த்ரிகம் து வா அஷ்டாக்ஷரச்ச யோ மந்த்ரோ த்வாதசாக்ஷர ஏவ ச ஷடக்ஷரச்ச யோ மந்த்ரோ விஷ்ணோரமிததேஜஸ: ஏதே மந்த்ரா: ப்ராதாநாஸ்து வைதிகா: ப்ராணவைர்யுதா: ப்ரணவேந விஹீநாஸ்து தாந்த்ரிகா ஏவ கீர்த்திதா: ந ஸ்வர: ப்ரணவ: அங்காநி நாப்யந்யவிதயஸ்ததா ஸ்த்ரீணாம் து சூத்ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே என்கிறபடியே ப்ரணவம் ஒழிந்தபோது, தத்ரோத்தராயணஸ்யாதி: பிந்துமாந் விஷ்ணுரந்தத: பீஜமஷ்டாக்ஷரஸ்ய ஸ்யாத் தேநாஷ்டாக்ஷரதா பவேத் என்கிற ப்ரக்ரியையாலே எட்டெழுத்தும் அநுஸந்தேயமாக விதிக்கப்பட்டது.
– வைதிகம் தாந்த்ரிகம் சைவ ததா வைதிகதாந்த்ரிகம் த்ரிவிதம் கர்ம ஸம்ப்ரோக்தம் பஞ்சராத்ராம்ருதார்ணவே – பாஞ்சராத்ரம் என்னும் பாற்கடலில் கர்மமானது வைதிகம், தாந்த்ரிகம், வைதிகதாந்த்ரிகம் என்னும் மூன்றுவிதமாக உள்ளது என்று கூறப்படுகிறது வைதிகம்ப்ராஹ்மணாநாம் து ராஜ்ஞாம் வைதிகதாந்த்ரிகம் தாந்த்ரிகம் வைச்ய சூத்ராணாம் ஸர்வேஷாம் தாந்த்ரிகம் து வா – அந்தணர்களுக்கு வைதிகமான கர்மங்கள், க்ஷத்ரியர்களுக்கு வைதிக தாந்த்ரிகமான கர்மங்கள், வைச்யர்கள் மற்றும் சூத்திரர்களுக்கு தாந்த்ரிக கர்மங்கள், அனைவருக்கும் தாந்த்ரிகமான கர்மங்கள் என்று உண்டு அஷ்டாக்ஷரச்ச யோ மந்த்ரோ த்வாதசாக்ஷர ஏவ ச ஷடக்ஷரச்ச யோ மந்த்ரோ விஷ்ணோரமிததேஜஸ: - அஷ்டாக்ஷரம் (எட்டெழுத்து – நமோ நாராயணா), த்வாதசாக்ஷரம் (பன்னிரண்டு எழுத்து – நமோ பகவதே வாஸுதேவா), ஷடக்ஷரம் (ஆறு எழுத்து – நமோ விஷ்ணவே) என்னும் மந்த்ரங்கள் எல்லையற்ற தேஜஸ் உள்ள விஷ்ணுவின் மந்த்ரங்கள் ஆகும் ஏதே மந்த்ரா: ப்ராதாநாஸ்து வைதிகா: ப்ராணவைர்யுதா: ப்ரணவேந விஹீநாஸ்து தாந்த்ரிகா ஏவ கீர்த்திதா: - இந்த மந்த்ரங்களுடன் ப்ரணவம் சேர்க்கும்போது, அவை வைதிக மந்த்ரங்களாகின்றன. ப்ரணவம் சேராதபோது அவை தாந்த்ரிக மந்தரங்கள் ஆகின்றன ந ஸ்வர: ப்ரணவ: அங்காநி நாப்யந்யவிதயஸ்ததா ஸ்த்ரீணாம் து சூத்ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே – பெண்களுக்கும், சூத்ரர்களுக்கும் மூலமந்த்ரத்தில், நாராயணா என்பதைத் தொடர்ந்து “ஆய” என்பது இல்லாமல் மட்டுமே அதிகாரம் உண்டு. மேலும் அவர்களுக்கு ஸ்வரம், ப்ரணவம், அங்கவிதிகள் முதலானவை இல்லை. மந்த்ரத்தை ஜபித்தல் மட்டுமே சாஸ்த்ரம் கூறுகிறது இப்படியாக ப்ரணவம் என்பது உச்சரிக்கப்படாமல் உள்ளபோது, நாரதீயகல்பத்தில் (1-27) - தத்ரோத்தராயணஸ்யாதி: பிந்துமாந் விஷ்ணுரந்தத: பீஜமஷ்டாக்ஷரஸ்ய ஸ்யாத் தேநாஷ்டாக்ஷரதா பவேத் – அஷ்டாக்ஷரத்தில் உள்ள நார, அயந என்னும் பதங்களில், அயந என்னும் பதத்தில் உள்ள “அ” என்பது விஷ்ணுவைக் குறிக்கும்; அதனுடன் “ம்” என்னும் எழுத்தை இணைத்தால், “அம்” என்பது கிட்டும்; இதுவே அஷ்டாரக்ஷத்திற்கான பீஜமாகும்; இவ்விதம் செய்வதால், எட்டெழுத்து கொண்ட மந்த்ரமாகிறது – என்று கூறுவதற்கு ஏற்ப, எட்டெழுத்து மந்த்ரமானது எப்போது கூறப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டது.