Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 5)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூன்று ரஹஸ்யங்களின் நோக்கம்
மூலம் – ஸத்த்வஸ்தர்க்கு அநுஸந்தேயங்களான ஸாரதமார்த்தங்களையும், அவற்றினுடைய ஸ்திரீகரண ப்ரகாரங்களையும் ப்ரதிபாதித்தோம். இவற்றையெல்லாம் ப்ரகாசிப்பிக்கிற ரஹஸ்யத்ரயத்தில் பதவாக்ய யோஜனைகள் இருக்கும்படி சொல்லுகிறோம்.
– இதுவரை ஒவ்வொரு ஸாத்விகரும் நினைவில் கொள்ளவேண்டியதான பல முக்கியமான தத்துவங்களை, சரியான ப்ரமாணங்களின் அடிப்படையில் விரிவாக விளக்கினோம். இனி இவை அனைத்தையும் ஒருமித்து வெளிப்படுத்துவதான மூன்று மந்த்ரங்களில் (திருமந்த்ரம், த்வயம், சரமச்லோகம்) காணப்படும் பதங்களையும், வாக்கியங்களையும் சரியானபடி வரிசைப்படுத்தி பொருள் கொள்ளவேண்டியது குறித்துக் கூறுவோம்.