Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 3)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
யதந்த: ஸ்தமசேஷேண வாங்மயம் வேதவைதிகம் தஸ்மை வ்யாபக முக்யாய மந்த்ராய மஹதே நம:
– வேதங்களிலும், அவற்றை ஆதாரமாக உள்ள ஸ்ம்ருதிகளிலும் உள்ள பதங்கள் அனைத்தும் எந்த மந்த்ரத்தில் அடங்கி உள்ளனவோ, வ்யாபக மந்த்ரங்களில் (ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாஸுதேவாய, ஓம் நமோ விஷ்ணவே ஆகிய மூன்றும் வ்யாபக மந்த்ரங்கள் எனப்படும்) எந்த மந்த்ரம் சிறப்பானதோ, அந்த மேன்மையான மந்த்ரத்திற்கு என்னுடைய நமஸ்காரம்.