Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 2)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
கல்யாணமாவஹது கார்த்தயுகம் ஸ்வதர்மம் ப்ரக்யாபயந் ப்ரணிஹிதேஷு நராதிகேஷு ஆத்யம் கமப்யதிகதோ ரதமஷ்டசக்ரம் பந்து: ஸதாம் பதரிகாச்ரம் தாபஸோ ந:
– மிகுந்த கவனத்துடன் கேட்கும் நரன், நாரதர் முதலானவர்களுக்கு, க்ருதயுகத்தின் தொடர்புடைய தன்னுடைய தர்மங்களை உபதேசம் செய்தபடியும், எட்டுச் சக்கரம் உள்ளதான மேன்மையான ரதத்தை (அதாவது எட்டு எழுத்து கொண்டதான மூலமந்த்ரம் என்னும் ரதம்) உடைய சான்றோர்களுக்குப் பந்துவாயும், பத்ரிநாத் என்னும் பதரிகாச்ரமத்தில் தவம் செய்தபடியும் உள்ள நாராயணன் நமக்கு மோக்ஷம் கிட்டும் காலம் முடிய க்ஷேமம் அளிக்கவேண்டும்.