Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 1)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
தாரம் பூர்வம் ததுநு ஹ்ருதயம் தச்ச நாராயணாயேதி ஆம்நாயோக்தம் மதமவயதாம் ஸார்த்தமாசார்யதத்தம் அக்நீகுர்வந் அலஸ மநஸாம் ஆத்மரக்ஷாபரம் ந: க்ஷிப்ரம் தேவ: க்ஷிபது நிகிலாந் கிங்கரைச்வர்ய விக்நாந்
– முதலில் ப்ரணவம், தொடர்ந்து நமஸ்ஸு, அதன் பின்னர் நாராயணாய என்று வேதங்களில் உபதேசிக்கப்பட்ட பதம் முதலானவற்றை நமது ஆசார்யன் நமக்குப் பொருளுடன் உபதேசிக்கிறார். அதனை எப்போதும் சிந்தித்தபடி உள்ள, வேறு கதி அற்றவர்களான நம்மைக் காப்பாற்றும் பாரத்தை ஸர்வேச்வரன் ஒப்புக்கொண்டுள்ளான். அவன் நம்முடைய கைங்கர்யம் என்னும் ஐச்வர்யத்துக்கு உண்டாகும் அனைத்துவிதமான தடைகளையும் நீக்கவேண்டும்.