Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 23)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

ராக த்வேஷ மதாதிகைரிஹ மஹாரக்ஷோபிரக்ஷோபிதே நித்யே ரக்ஷிதரி ஸ்திதே நிஜ பர ந்யாஸாபிதாநம் தப: யத் கக்ஷீக்ருதமத்யசேத விவிதாந் தர்மாநதர்மத்ருஹ: தத் பூமார்ணவ லேசவர்ணநமபி ப்ராசாம் ந வாசாம் பதம்

– இந்த உலகில் காணப்படும் ஆசை, வெறுப்பு,கர்வம் முதலான பெரிய அரக்கர்களால் எப்போதும் பாதிக்கப்படாமல் அனைத்தையும் காக்கும் ஸர்வேச்வரன் உள்ளான். அவனுடைய திருவடிகளில் நம்முடைய பாரத்தைச் சமர்ப்பித்தல் என்பதான ப்ரபத்தி என்னும் தவமானது, பாவங்களை நீக்கவல்ல பலவிதமான தர்மங்களைக் காட்டிலும் மேலானதாக உள்ளது என்று ஏற்கப்படுகிறது. இப்படிப்பட்ட ப்ரபத்தியின் பெருமை என்னும் கடலின் ஒரு துளியை வர்ணித்தல் என்பது வேத வரிகளுக்கும் இயலாத செயலாகும்.