Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 22)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

உண்மை யுரைக்கு மறைகளி லோங்கிய வுத்தமனார் வண்மை யளப்பரி தாதலின் வந்து கழல்பணிவார் தண்மை கிடக்கத் தரமள வென்ற வியப்பிலதாம் உண்மை யுரைத்தன ரோரந் தவிர வுயர்ந்தனரே

– உண்மையை மட்டுமே உரைப்பதான உபநிஷத்துக்களில் போற்றப்படும் மிகவும் உயர்ந்த புருஷோத்தமனாகிய ஸர்வேச்வரனுடைய பெருமைகள் இத்தகையது என்று அளவிட இயலாது; ஆகவே அவனுடைய திருவடிகளில் பணிந்து நிற்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்றாலும், அவர்களுடைய பெருமையும் அளவிடும் இயல்புடையது அல்ல என்ற உண்மையை நம்முடைய ஆசார்யர்கள் எவ்விதமான பாரபக்ஷமும் இல்லாமல் உபதேசித்தார்கள்.