Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 21)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
பாகவதர்களுடன் சேர்ந்து வாழவேண்டிய முறை
மூலம் – இப்படி வ்யவஸ்திதமான ப்ரபாவம் ரஹஸ்யத்ரயத்தில் பலநிர்தேச ப்ரதேசங்களிலே அநுஷங்க ஸித்தமாக அநுஸந்தேயம்.
– இப்படியாக உள்ள நிலையின் ப்ரபாவங்கள் குறித்து ரஹஸ்ய மந்த்ரங்கள் மூன்றின் பலன் குறித்துக் கூறப்படும் இடங்களில், நேரடியாகக் கூறப்படாமல் உள்ளபோதிலும், தானாகவே வெளிப்படுகிறது.