Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 16)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

ஸர்வேச்வரனைப் பகைக்காமல் உள்ளவர்களுக்கு மட்டுமே நாம ஸங்கீர்த்தனம் முதலானவை பலன் அளிக்கும்

மூலம் – ஆர்த்தா விஷண்ணா: சிதிலாச்ச பீதா கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமாநா: ஸம்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்ததுக்கா: ஸுகிநோ பவந்தி என்றும் அவசேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாந் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரஸ்தைர் ம்ருகைரிவ என்றும் ஸாங்கேத்யம் பரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா வைகுண்டநாம க்ரஹணம் அசேஷாக விநாசநம் என்றும் ஹரிர்ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: அநிச்சயாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக: என்றும் ஏதாவதாலபக நிர்ஹரணாய பும்ஸாம் ஸங்கீர்த்தனம் பகவதோ குணகர்ம நாம்நாம் ஆக்ருச்ய புத்ரமகவாந் யதஜாமிளோபி நாராயணேதி மித்ரயமாண உபைதி முக்திம் என்றும் “மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்துடைய பேரால் கத்திரபந்துமன்றே பராங்கதி கண்டுகொண்டான் இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனைப் பெற்றும்” என்றும் சொல்லுகிற இவையெல்லாம், பகவத்ப்ரவித்வேஷம் இல்லாதவனுக்கு ஆஸ்திக்யம் மந்தமாகிலும், பாலாதிகளைப் போலே அர்த்தஞானம் இல்லையேயாகிலும், வாய் வெருவுமாப் போலே அபிஸந்தி இல்லையேயாகிலும், ஸங்கேத பரிஹாஸாதிகளிலே துவக்குண்டு அபிஸந்த்யந்தரம் உண்டாகிலும், ப்ரயோஜநாந்தர ஸங்கமுண்டாகிலும், தோஷாந்தரங்களுண்டாகிலும் ஸங்கீர்த்தனம் பாவநதமம் என்றபடி. அல்லது பகவத்பரிவாதாதிகளுக்காக பகவந்நாம ஸங்கீர்த்தனம் பண்ணினாலும் பாபம் போம் என்றபடியன்று. பகவத்பரிவாதாதிகள் பாதகங்களாகவிறே பரிகணித்துக் கிடப்பது. யே த்விஷந்தி மஹாத்மாநம் ந ஸ்மரந்தி ச கேசவம் ந தேஷாம் புண்யதீர்த்தேஷு கதி: ஸம்ஸர்கிணாமபி என்றும், ய: புத்ர: பிதரம் த்வேஷ்டி தம் விதாதந்யரேதஸம் யோ விஷ்ணும் ஸததம் த்வேஷ்டி தம் வித்யாதந்த்யரேதஸம் என்றும் சொன்னார்களிறே.

– ஆர்த்தா விஷண்ணா: சிதிலாச்ச பீதா கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமாநா: ஸம்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்ததுக்கா: ஸுகிநோ பவந்தி – இந்த உலகில் ஸுகம் கிட்டாத காரணத்தால் வருத்தம் அடைபவர்களும், ஸ்வர்க்கம் முதலான ஸுகம் கிட்டாத காரணத்தால் வருத்தம் அடைபவர்களும், எதிலும் நிலை இல்லாமல் உள்ளவர்களும், ஸம்ஸாரத்தைக் கண்டு அச்சம் கொள்பவர்களும், நோயால் வருந்துபவர்களும் “நாராயணா” என்ற ஒரு பதத்தைக் கூறினால் மட்டுமே போதுமானது; தங்களுடைய துன்பம் நீங்கி, இன்பம் அடைவர். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-8-19) - அவசேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாந் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரஸ்தைர் ம்ருகைரிவ – ஸர்வேச்வரனுடைய திருநாமத்தை எவ்விதம் உச்சரித்தாலும், சிங்கத்தைக் கண்ட மான்கள் அந்தக் காட்டை விட்டு ஓடுவது போன்று, அனைத்து பாவங்களும் அவனை விட்டு ஓடுகின்றன. ஸ்ரீமத்பாகவதம் (6-2-14) - ஸாங்கேத்யம் பரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா வைகுண்டநாம க்ரஹணம் அசேஷாக விநாசநம் – ஒருவனுக்குப் பெயர் சூட்டுவதாலும், பரிஹாஸம் செய்வதாலும், ஸ்தோபமாகவும் (நாராயணா என்பதற்குப் பதில் நாணா என்று கூறுவது), ஏளனமாகவும் (நாராயணா என்று உச்சரிப்பவனை, நாராயணா என்று கிண்டலாக அழைத்தல்) என்று எவ்விதம் அவனுடைய திருநாமத்தை உச்சரித்தாலும், அது அனைத்து பாவங்களையும் நீக்கும். ஹரி அஷ்டகம் - ஹரிர்ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: அநிச்சயாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக: - ஸ்ரீஹரியான பகவான், தீய மனம் உள்ளவர்களால் நினைக்கப்பட்டால் கூட, அவர்களுடைய பாவங்களைப் போக்குகிறான். அறியாமல் நெருப்பைத் தொட்டாலும், அது எரிக்கும் அல்லவோ? ஸ்ரீமத்பாகவதம் (6-4-34) - ஏதாவதாலபக நிர்ஹரணாய பும்ஸாம் ஸங்கீர்த்தனம் பகவதோ குணகர்ம நாம்நாம் ஆக்ருச்ய புத்ரமகவாந் யதஜாமிளோபி நாராயணேதி மித்ரயமாண உபைதி முக்திம் – மனிதர்களுடைய பாவங்களை நீக்கும்விதமாக ஸர்வேச்வரனுடைய குணங்கள் மற்றும் அவனுடைய லீலைகளை உணர்த்தும் திருநாமங்கள் பலவற்றையும் கூறவேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு திருநாமம் கூறினாலே போதுமானது. காரணம், அஜாமிளன் மிகுந்த பாபியாக இருந்தபோதிலும், இறக்கும் தருணத்தில் தனது புத்திரனை “நாராயணா” என்று அழைத்து முக்தி அடைந்தான் அல்லவோ? திருமாலை (4) மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்துடைய பேரால் கத்திரபந்துமன்றே பராங்கதி கண்டுகொண்டான் இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனைப் பெற்றும் – நெய்யுள்ள குடத்தைச் சூழ்ந்துள்ள எறும்புகள் போன்று, தன்னைச் சூழ்ந்துள்ள கர்மபலன்களின் நடுவில் உள்ள க்ஷத்ரபந்து என்பவன், மூன்று அக்ஷரங்களுடைய “கோவிந்த” என்று அழைத்து உயர்ந்த கதி அடைந்தான். இப்படியாகத் தனது அடையார்கள் விஷயத்தில் மிகுந்த பித்துப் பிடித்தவனாக உள்ள ஸ்ரீரங்கநாதன் உள்ளபோது, (அவனை நாடாமல்) ஏன் ஸம்ஸாரத்தில் துன்பம் அடைகிறார்கள்? மேலே உள்ள பல வரிகளின் மூலம் உணர்த்தப்படுவது – ஒருவனுக்கு பகவானிடம் விரோதம் பாராட்டும் புத்தி இல்லையென்றால் அவனுக்கு ஆஸ்திகத்தன்மை குறைவாக உள்ளபோதிலும், சிறு குழந்தைகள் போன்று பகவானைப் புகழ்த்தும் வரிகளின் பொருளை அறியவில்லை என்றாலும், எந்தவிதமான உட்கருத்தும் உணராமல், ஏதோ ஒன்றை உரைப்பது போன்று திருநாமத்தை உரைத்தாலும், பரிஹஸிக்கும் விதமாகவோ வேறு பலனை விரும்பியோ உரைத்தாலும், கூறுவதில் தோஷங்கள் இருந்தாலும் பகவானின் திருநாமங்களை உச்சரித்தல் என்பது அவனைப் பரிசுத்தனாக்கும். ஆனால் பகவானைத் தூஷிக்கும்விதமாக அவனுடைய திருநாமங்களை உச்சரித்தால் பாவமே உண்டாகும். அவனைத் தூஷிப்பது பாவமே என்றல்லவோ கணக்கிடப்பட்டுள்ளது? கீழே உள்ள வரிகள் காண்க: மஹாபாரதம் சாந்திபர்வம் (336-36) - யே த்விஷந்தி மஹாத்மாநம் ந ஸ்மரந்தி ச கேசவம் ந தேஷாம் புண்யதீர்த்தேஷு கதி: ஸம்ஸர்கிணாமபி – கேசவனை எண்ணாத அளவிற்கு அவனிடம் பகைமை பாராட்டுபவர்களும், அவர்களுடன் சேர்பவர்களும் புண்ய நதிகளில் நீராடினால் கூட, எந்தவிதமான பலனையும் பெறமாட்டனர். ப்ரஹ்மாண்ட புராணம் - ய: புத்ர: பிதரம் த்வேஷ்டி தம் விதாதந்யரேதஸம் யோ விஷ்ணும் ஸததம் த்வேஷ்டி தம் வித்யாதந்த்யரேதஸம் – தன்னுடைய தந்தையுடன் பகை கொள்ளும் புத்திரனை வேறு ஒருவனுக்குப் பிறந்தவனாகவே கொள்ளவேண்டும். விஷ்ணுவிடம் எப்போதும் பகைமையுடன் உள்ளவனை சண்டாளனுக்குப் பிறந்தவனாகவே அறியவேண்டும்.