Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 15)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
ஆதரிக்க வேண்டும்
மூலம் – உள்ளொரு பசையற்றுப் பசுத்தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாயுங்கணக்கிலே பகவதவபாநை பண்ணித் திரிவாரையும் உள்ளறியுமளவும் உபரிசராதிகள் அஸுராதிகளை ஆதரித்தாற்போலே ரூப நாமங்களையிட்டு ஆதரிக்கப் ப்ராப்தம். இப்படிக்கொத்த சைலூஷ வ்ருத்திகளைப் பற்ற ந லிங்கம் தர்மகாரணம் பலம் கதக வ்ருக்ஷஸ்ய யத்யப்யம்பு ப்ரஸாதநம் ந நாமக்ரஹணேநைவ தஸ்ய வாரி ப்ரஸீததி என்கிறது.
– தங்களுடைய உள்ளத்தில் எந்தவிதமான பக்தியும் இல்லாமல், பசுத்தோலைப் போர்த்தியபடி திரியும் புலி போன்று சிலர் வெளிவேஷம் பூண்டு இருக்கக்கூடும். அவர்களுடைய உண்மையான தன்மை வெளிப்படும்வரை, உபரிசரர் முதலானோர் எவ்விதம் அஸுரர்களை அவர்களுடைய தன்மை வெளிப்படும்வரை ஆதரித்தார்களோ, அது போன்று அவர்களுடைய ரூபங்களையும் பெயர்களையும் அவமானம் செய்யாமல் மதித்தபடி இருக்கவேண்டும். இப்படியாக இயல்பாகவே நடிக்கும் தொழிலுடன் கூடியவர்கள் குறித்த கீழே உள்ள வரிகளை காண்க: இதிஹாஸ ஸமுச்சயம் - ந லிங்கம் தர்மகாரணம் – இந்த வேஷங்கள் மோக்ஷ காரணம்ம் ஆகாது. மநுஸ்ம்ருதி (6-67) - பலம் கதக வ்ருக்ஷஸ்ய யத்யப்யம்பு ப்ரஸாதநம் ந நாமக்ரஹணேநைவ தஸ்ய வாரி ப்ரஸீததி – தேத்தாங்கொட்டை என்பது நீரைத் தெளிவாக்கும் என்றபோதிலும், அதன் பெயரை மட்டும் கூறுவதால் நீரானது தெளிவாகாது.