Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 14)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
மோக்ஷம் கிட்டாமை மற்றும் கிட்டும் நிலை
மூலம் – ந சப்தசாஸ்த்ராபிரதஸ்ய மோக்ஷோ ந போஜநாச்சாதந தத்பரஸ்ய ந சைவ ரம்யாவஸத ப்ரியஸ்ய ந லோக சித்தக்ரஹணே ரதஸ்ய இத்யாதிகளிலும் பகவத்ப்ராவண்யமின்றிக்கே, சிச்நோதரே யே அபிரதா: ஸதைவ ஸ்தேயாந்ருதா வாக்பருஷாச்ச நித்யம் வ்யபததர்மா இதி தாந் விதித்வா தூராத்தேவா: ஸம்பரிவர்ஜயந்தி என்கிறபடியே பாஹ்யவிஷய ப்ராவண்யமேயுடையார்க்கு மோக்ஷமில்லை என்றபடி. பராங்முகாநாம் கோவிந்தே விஷயாஸக்த சேதஸாம் தேஷாம் தத்பரமம் ப்ரஹ்ம தூராத் தூரதரே ஸ்திதம் இத்யாதிகளிலும் இவ்வர்த்தம் ஸித்தம். தந்மயத்வேந கோவிந்தே யே நரா ந்யஸ்தசேதஸ: விஷய த்யாகாதிநஸ்தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே இத்யாதிகள் பகவத்பரருமாய் விஷய த்யாகாதிகளுமானார்க்கு விளம்பமில்லை என்கிறன.
– இதிஹாஸ ஸமுச்சயம் (2-10) - ந சப்தசாஸ்த்ராபிரதஸ்ய மோக்ஷோ ந போஜநாச்சாதந தத்பரஸ்ய ந சைவ ரம்யாவஸத ப்ரியஸ்ய ந லோக சித்தக்ரஹணே ரதஸ்ய – சப்த இலக்கண சாஸ்த்ரங்களில் எப்போதும் மூழ்கியபடி உள்ளவனுக்கும், உடை மற்றும் உணவு விஷயங்களில் ஈடுபட்டபடி உள்ளவனுக்கும், அழகான வீட்டில் வசிப்பதில் விருப்பம் உள்ளவனுக்கும், உலகத்தினரின் மனம் கவரும்விதமாகப் பேச ஆர்வம் உள்ளவனுக்கும் மோக்ஷம் கிட்டாது – என்றும், பகவானைக் குறித்த சிந்தனை சிறிதும் இல்லாமல், மஹாபாரதம் சாந்திபர்வம் (305-36) - சிச்நோதரே யே அபிரதா: ஸதைவ ஸ்தேயாந்ருதா வாக்பருஷாச்ச நித்யம் வ்யபததர்மா இதி தாந் விதித்வா தூராத்தேவா: ஸம்பரிவர்ஜயந்தி – எப்போதும் சிற்றின்பம் மற்றும் உண்ணுதல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள், திருடுதல் மற்றும் கடுமையாகப் பேசுதல் என்பதையே இயல்பாக உள்ளவர்கள் முதலானோர் தங்களுடைய தர்மங்களை விட்டவர்கள் என்று கருதி தேவர்கள் இவர்களை அண்டுவதில்லை – என்றும் கூறுவதற்கு ஏற்ப தாழ்ந்த சிந்தனையும் செயலும் உள்ளவர்களுக்கு மோக்ஷம் கிட்டுவதில்லை. இதனை ஸ்ரீவிஷ்ணுதர்மம் (99-13) - பராங்முகாநாம் கோவிந்தே விஷயாஸக்த சேதஸாம் தேஷாம் தத்பரமம் ப்ரஹ்ம தூராத் தூரதரே ஸ்திதம் – கோவிந்தனை மறந்து எப்போதும் சிற்றின்ப விஷயங்களில் மனதைச் செலுத்துபவர்களுக்கு, பரப்ரஹ்மம் மிகவும் தூரத்தில் உள்ளது – என்று உரைத்தது காண்க. ஆனால், ஸ்ரீவிஷ்ணுதர்மம் (99-15) - தந்மயத்வேந கோவிந்தே யே நரா ந்யஸ்தசேதஸ: விஷயத்யாகாதிநஸ்தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே – கோவிந்தனை எப்போதும் சிந்தித்தபடி, அவனிடம் மட்டுமே மனதைச் செலுத்தி, மற்ற விஷயங்களில் பற்றுதல் இல்லாமல் உள்ளவர்களின் அருகில் பகவான் எப்போதும் உள்ளான் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனை எண்ணியபடியும், மற்ற விஷயங்களைக் குறித்த சிந்தனை இல்லாமலும் உள்ளவர்களுக்கு மோக்ஷம் தாமதிக்காமல் உண்டாகிறது. போலியான பாகவதர்களைக் கூட உண்மை வெளிப்படும்வரை