Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 12)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
நல்ல மார்க்கத்திலிருந்து சற்றே தவறிய பாகவதர்களை நிந்திக்கக்கூடாது
மூலம் – ஆகையால் அநுவ்ருத்த புத்திபூர்வ தோஷரான பாகவதர்க்கு உபக்லேசாதிகள் உண்டானாலும் அவஜ்ஞாதிகள் பண்ணலாகாது. அவைஷ்ணவ நமஸ்காராத் அவமாநாச்ச கேசவே வைஷ்ணவே பரிவாதாச்ச பதத்யேவ ந ஸம்சய: யதிநிந்தாபரோ நித்யம் வைஷ்ணவாநவமந்யது அத்யாத்மவிமுக: ஸோஸ்து பிஸஸ்தைந்யம் கரோதி ய: அந்தர்துஷ்டோ பஹி: சாந்தோ ப்ரஹ்மவித் த்வேஷதத்பர: கர்மநிந்தாபர: ஸோஸ்து பிஸஸ்தைந்யம் கரோதி ய: நித்யாநிஷ்டாந ஸம்யுக்தாந் அத்யாத்ம ஞானதுர்பலாந் வ்யாமோஹயதி துர்புத்தி: பிஸஸ்தைந்யம் கரோதி ய: என்று சொல்லப்பட்டதிறே.
– ஆகவே பாகவதர்களுக்கு, அவர்கள் அறிந்தே தவறுகள் செய்ய நேர்ந்தாலும், அவர்களை அவமானம் செய்தல் கூடாது. கீழே உள்ள வரிகளைக் காண்க: நாரதீயம் - அவைஷ்ணவ நமஸ்காராத் அவமாநாச்ச கேசவே வைஷ்ணவே பரிவாதாச்ச பதத்யேவ ந ஸம்சய: - விஷ்ணுவின் பக்தர்களாக இல்லாதவர்களை வணங்குவதாலும், ஸர்வேச்வரனை அவமானம் செய்வதாலும், விஷ்ணுவின் பக்தர்களைத் தூஷிப்பதாலும் உடனேயே தாழ்ந்தவனாகிறான் என்பதில் ஐயம் இல்லை. இதிஹாஸ ஸமுச்சயம் (10 – 62) - யதிநிந்தாபரோ நித்யம் வைஷ்ணவாநவமந்யது அத்யாத்மவிமுக: ஸோஸ்து பிஸஸ்தைந்யம் கரோதி ய: - தாமரைக் கிழங்கைத் திருடிய ஒருவன் துறவிகளை இகழ்வதாலும், வைஷ்ணவர்களை அவமதிப்பதாலும் ஆத்மாவை அறிய முயலாமல் உள்ளதால் உண்டாகக்கூடிய தோஷத்தை அடைகிறான். இதிஹாஸ ஸமுச்சயம் (10 – 75) - அந்தர்துஷ்டோ பஹி: சாந்தோ ப்ரஹ்மவித் த்வேஷதத்பர: கர்மநிந்தாபர: ஸோஸ்து பிஸஸ்தைந்யம் கரோதி ய: - தாமரைக் கிழங்கைத் திருடிய ஒருவன் தனது மனதில் எப்போதும் தோஷங்கள் உள்ளவனாகவும், வெளியில் காணும்போது சாந்தனாகவும், ப்ரஹ்மஞானிகளிடம் எப்போதும் துவேஷம் பாராட்டுபவனாகவும், சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட சிறந்த கர்மங்களை வெறுப்பவனாகவும் மாறட்டும். இதிஹாஸ ஸமுச்சயம் (10 – 76) - நித்யாநிஷ்டாந ஸம்யுக்தாந் அத்யாத்ம ஞானதுர்பலாந் வ்யாமோஹயதி துர்புத்தி: பிஸஸ்தைந்யம் கரோதி ய: - தாமரைக் கிழங்கைத் திருடிய ஒருவன் தீயபுத்தி உள்ளவனாகவும், நல்ல அனுஷ்டானம் உள்ளபோதிலும் ஜீவாத்ம பரமாத்ம விஷயத்தில் உறுதியான அறிவு இல்லாதவர்களை மயக்குபவனாகவும் மாறட்டும்.