Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 11)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

நல்ல மார்க்கத்திலிருந்து சற்றே தவறிய பாகவதர்களை நிந்திக்கக்கூடாது

மூலம் – அப்படியே ஸ்ரீபுண்டரீக நாரத ஸம்வாதத்திலும் சீரவாஸா ஜடீ வா ஸ்யாத் த்ரிதண்டீ முண்ட ஏவ வா பூஷிதோ வா த்விஜச்ரேஷ்ட ந லிங்கம் தர்மகாரணம் யே ந்ருசம்ஸா துராத்மாந: பாபாசாரரதா: ஸதா தே அபி யாந்தி பரம் ஸ்தாநம் நரா நாராயணாச்ரிதா: லிப்யந்தே ந ச பாபேந வைஷ்ணவா வீதகல்மஷா: புநந்தி ஸகலம் லோகம் ஸஹஸ்ராம்சுரிவோதித: ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு யஸ்ய ஸ்யாத்புத்திரீத்ருசீ தாஸோஹம் வாஸுதேவஸ்ய ஸர்வலோக மஹாத்மந: ஸ யாதி விஷ்ணு ஸாலோக்யம் புருஷோ நாத்ர ஸம்சய: கிம் புநஸ்தத்கதப்ராணா: புருஷா: ஸம்யதேந்த்ரியா: என்று பகவத்ப்ரவணர் அநுவ்ருத்த தோஷரானாலும் யதார்ஹ ப்ராயச்சித்தாதிமுகத்தாலே மோக்ஷஸித்தியில் ஸம்சயமில்லையென்னுமிடத்தையும், நிர்த்தோஷருக்குக் கௌமுதிக ந்யாயத்தாலே கடுக மோக்ஷஸித்தியையும் சொல்லி, அச்வமேத சதைரிஷ்ட்வா வாஜபேயசதைரபி ந ப்ராப்நுவந்தி ஸுகதிம் நாராயண பராங்முகா: என்றும் பகவத்விமுகருக்கு அநந்தங்களான உத்க்ருஷ்ட ஸுக்ருதங்களாலும் ஸுகதி இல்லையென்று மஹர்ஷி இவ்வர்த்தங்களை ப்ரபஞ்சித்தான். யே ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது: என்கையாலே, பகவத்ஞானம் உடையவனுடைய ப்ரபாவம் நித்யஸூரிகளுக்கும் பரிச்சேத்யமன்றிறே.

– புண்டரீகனுக்கும் நாரதனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலில் கீழே உள்ள வரிகள் காணலாம்: இதிஹாஸ ஸமுச்சயம் (31-118, 119) - சீரவாஸா ஜடீ வா ஸ்யாத் த்ரிதண்டீ முண்ட ஏவ வா பூஷிதோ வா த்விஜச்ரேஷ்ட ந லிங்கம் தர்மகாரணம் யே ந்ருசம்ஸா துராத்மாந: பாபாசாரரதா: ஸதா தே அபி யாந்தி பரம் ஸ்தாநம் நரா நாராயணாச்ரிதா: - அந்தணர்களில் உயர்ந்தவனே! பகவானின் பக்தன் ஒருவன் மரவுரியையோ அல்லது நல்ல ஆடையையோ அணிந்தாலும், சடை அல்லது நல்ல கேசம் உள்ளவன் என்றாலும், த்ரிதண்டம் அல்லது ஏகதண்டம் கொண்டிருந்தாலும், மொட்டைத் தலையோடு இருந்தாலும், ஆச்ரம தர்மங்களின் அடையாளங்களுடன் உண்டு அல்லது அவை இல்லை என்றாலும் இவை ஏதும் மோக்ஷம் அளிக்கவல்லவை அல்ல. சிறிதும் இரக்கம் இல்லாமல், எப்போதும் தீய வழிகளில் நிற்பவர்கள் கூட, நாராயணனை அண்டினால் மோக்ஷம் பெறலாம். இதிஹாஸ ஸமுச்சயம் (31-120) - லிப்யந்தே ந ச பாபேந வைஷ்ணவா வீதகல்மஷா: புநந்தி ஸகலம் லோகம் ஸஹஸ்ராம்சுரிவோதித: - ஸர்வேச்வரனை அண்டிய வைஷ்ணவர்கள், அறிந்தே செய்யும் பாவங்களைத் தகுந்த பிராயச்சித்தம் செய்து போக்கியும், அறியாமல் செய்யும் பாவங்கள் தங்களிடம் ஒட்டாமலும் செய்து, உதயசூரியன் போன்று இந்த உலகம் முழுவதையும் தூய்மை அடையச் செய்கிறார்கள். இதிஹாஸ ஸமுச்சயம் (31-121, 122) - ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு யஸ்ய ஸ்யாத்புத்திரீத்ருசீ தாஸோஹம் வாஸுதேவஸ்ய ஸர்வலோக மஹாத்மந: ஸ யாதி விஷ்ணு ஸாலோக்யம் புருஷோ நாத்ர ஸம்சய: கிம் புநஸ்தத்கதப்ராணா: புருஷா: ஸம்யதேந்த்ரியா: - “அனைத்து உலகங்களிலும் மஹாத்மா என்று கொண்டாடப்படும் வாஸுதேவனுக்கு நான் அடிமை” என்னும் எண்ணம் யார் ஒருவனுக்கு பல்லாயிரம் பிறவிகளின் இறுதியில் உண்டாகிறதோ, அவன் விஷ்ணுவின் பரமபதம் அடைகிறான். இதில் சிறிதும் ஐயம் இல்லை. இந்த்ரியங்களை அடக்கி, பகவானிடம் தங்களுடைய பிராணனை வைத்தவர்கள், அவனை அடைவது குறித்துக் கூறவும் வேண்டுமோ? ஆக, ஸர்வேச்வரனை எப்போதும் சிந்தித்தபடி உள்ளவர்கள், இடைவிடாமல் குற்றங்களைச் செய்தபடி இருந்தாலும், அவற்றுக்கான பிராயச்சித்தம் செய்தால் அவர்களுக்கு மோக்ஷம் கிட்டுவதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இப்படி உள்ளபோது, தோஷம் இல்லாதவருக்கு மோக்ஷம் கிட்டுவதைக் கூறவும் வேண்டுமோ? இதிஹாஸ ஸமுச்சயம் (31-170) - அச்வமேத சதைரிஷ்ட்வா வாஜபேயசதைரபி ந ப்ராப்நுவந்தி ஸுகதிம் நாராயண பராங்முகா: - நாராயணனை உதாசீனம் செய்து, நூறு அச்வமேத யாகங்களையும், நூறு வாஜபேய யாகங்களையும் செய்தாலும், அவர்கள் நல்லகதி அடையமாட்டார்கள் என்று கூறியது காண்க. ஆக ஸர்வேச்வரனை மறந்தவர்களுக்கு, எப்படிப்பட்ட உயர்ந்த மார்க்கத்தாலும் மோக்ஷம் கிட்டாது என்பதை விரிவாக உரைத்தது காண்க. மஹாபாரதம் வனபர்வம் (160-21) - யே ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது: - க்ருஷ்ணனை உள்ளபடி அறிபவர்களின் பெருமையை நித்யஸூரிகளும் அறியமாட்டனர் – என்பதால், பகவானைக் குறித்த ஞானம் உள்ளவர்களின் மேன்மையை, நித்யஸூரிகளாலும் அளவிட இயலாது என்று தேறுகிறது.