Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 8)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
முதலில் செய்யப்பட்ட ப்ரபத்தியே, அதன் பின்னர் அறிந்தே செய்யும் பாவங்களை நீக்கும் என்பதற்கான மறுப்பு
மூலம் – தம் மாதா பித்ருத ஹந்தாரமபி பாதி பவார்த்திஹா என்றதுவும் உத்தராக விஷயமல்லாதபோது உபப்லவமில்லை. உத்தராக விஷயத்தில் நிஸ்தார க்ரமங்கள் முன்பே சொன்னோம். சரணம் ச ப்ரபந்நாநாம் தவாஸ்மீதி ச யாசதாம் ப்ரஸாதம் பித்ரு ஹந்த்ருணாம் அபி குர்வந்தி ஸாதவ: இத்யாதிகளும் இப்படிக்கு ஸுகாடிதங்கள்.
ஸநத்குமார ஸம்ஹிதை - தம் மாதா பித்ருத ஹந்தாரமபி பாதி பவார்த்திஹா – தன்னுடைய மாதாபிதாக்களைக் கொன்றவனாக உள்ளபோதிலும் காக்கிறான் – என்பது ப்ரபத்திக்குப் பின்னர் நிகழ்ந்தால் மட்டுமே சாஸ்த்ர விரோதமாகாது. ப்ரபத்தியின் பின்னர் செய்யப்படும் பாவங்களுக்கான பிராயச்சித்தம் குறித்து முன்பே (அபராத பரிஹாராதிகாரம்) கூறினோம். விஷ்ணுதர்மம் (106-53) - சரணம் ச ப்ரபந்நாநாம் தவாஸ்மீதி ச யாசதாம் ப்ரஸாதம் பித்ரு ஹந்த்ருணாம் அபி குர்வந்தி ஸாதவ: - சரணம் புகுந்தவர்களையும், “உங்களுக்கு நான் அடிமையாக இருப்பேன்” என்று கூறுபவர்களையும், அவர்கள் தகப்பனைக் கொன்றவர்கள் என்றாலும், ஸாதுக்கள் காப்பாற்றுகிறார்கள் – என்பதிலும் இது பொருந்தும்.