Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 7)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
ப்ரபத்தியின் ப்ரபாவம் குறையாமல் அநுஸந்திக்க வேண்டும்
மூலம் – ஆகையால் ஆபூத ஸம்ப்லவம் நரகத்திலே கிடக்கும்படி க்ஷணக்ருத பாப கர்மங்களுடைய ப்ரபாவமான பகவந்நிக்ரஹ விசேஷத்தை இசைந்தாற் போலவும், “துக்க ஸம்ஸார காந்தாரம் அபாரமிபிதாவதாம் ஏக: க்ருஷ்ண நமஸ்கரோ முக்தீரஸ்ய தேசிக:” என்றும், “ஏகோபி க்ருஷ்ணே ஸுக்ருத: ப்ரணாமோ தசாச்வமேதாவப்ருதேந துல்ய: தசாச்வமேதீ புநரேதி ஜந்ம ப்ரணாமீ ந புநர்பவாய” என்றும், ஸுக்ருத ப்ரணாம விசேஷத்தினுடைய ப்ரபாவத்தை இசைந்தாற் போலவும், ஸக்ருதேவ ப்ரபந்நாய, அத பாதக பீதஸ்த்வம், குயோநிஷ்வபி ஸஞ்ஜாதோ ய: ஸக்ருச்சரணம் கத: இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே இப் ப்ரபத்தி ப்ரபாவத்தையும் சாஸ்த்ரார்த்தோபப்லவ ப்ரஸங்கமில்லாத விஷயத்தில் சுருங்காதே அநுஸந்திக்கப் ப்ராப்தம்.
– ஒரு நொடியில் செய்யக்கூடியதான சில பாவங்கள், ஸர்வேச்வரன் நமக்கு அளிக்கும் தண்டனை காரணமாக உண்டாகி, அதனால் மஹாப்ரளயம் முடிய நரகங்களில் தள்ளக்கூடிய சக்தி அந்தப் பாவங்களுக்கு உள்ளதை ஏற்றுக்கொள்கிறோம்; கீழே உள்ள வரிகளில் கூறப்பட்டபடி ஸுக்ருத ப்ரணாமத்தின் பெருமையை நாம் ஏற்றுக் கொள்கிறோம் (ஸுக்ருத ப்ரணாமம் – இரண்டு கைகளால் மூன்று தடவை அஞ்ஜலி செய்து, முழங்கால் வரை கைகளை நீட்டியபடி நெற்றி, மூக்கு, கன்னம் முதலியவைகளால் மூன்று முறை பூமியைத் தொட்டு ஸாஷ்டாங்கமான நமஸ்காரத்தைப் பன்னிரண்டு முறை செய்வதாகும்): விஷ்ணுதர்மம் (1-18) - துக்க ஸம்ஸார காந்தாரம் அபாரமிபிதாவதாம் ஏக: க்ருஷ்ண நமஸ்கரோ முக்தீரஸ்ய தேசிக: - ஸம்ஸாரம் என்பதான எல்லை காண இயலாத கானகத்தில் ஓடியபடி உள்ளவர்களுக்கு, க்ருஷ்ணனைக் குறித்துச் செய்வதான நமஸ்காரம் என்பது, மோக்ஷம் என்பதான எல்லையைக் காணச்செய்யும். மஹாபாரதம் சாந்திபர்வம் (46-119) - ஏகோபி க்ருஷ்ணே ஸுக்ருத: ப்ரணாமோ தசாச்வமேதாவப்ருதேந துல்ய: தசாச்வமேதீ புநரேதி ஜந்ம ப்ரணாமீ ந புநர்பவாய – க்ருஷ்ணனைக் குறித்து ஒருமுறை செய்யப்பட்ட ஸுக்ருத ப்ரணாமம் என்பது பத்து முறை செய்யப்பட்ட அச்வமேதத்திற்குச் சமம் ஆகுமோ? இல்லை, காரணம் பத்து அச்வமேத யாகம் செய்தவன் மீண்டும் பிறக்கக்கூடும்; ஆனால் க்ருஷ்ணனைக் குறித்து ஸுக்ருத ப்ரணாமம் செய்தவன் மீண்டும் பிறப்பதில்லை. ஆகவே மேலே உள்ளதை ஏற்றுக் கொள்வதைப் போன்று, கீழே காணப்படும் வரிகளில் கூறப்படுவதான நொடிப்பொழுதில் அநுஷ்டிக்கப்படும் ப்ரபத்தியின் பெருமையை, சாஸ்த்ர விரோதம் இல்லாத மார்க்கத்தில் குறைவில்லாமல் ஏற்கவேண்டும்: இராமாயணம் யுத்தகாண்டம் (18-33) - ஸக்ருதேவ ப்ரபந்நாய – ஒருமுறை ப்ரபத்தி செய்தாலும் விஷ்ணுதர்மம் (66-72) - அத பாதக பீதஸ்த்வம் – பாவங்களுக்குப் பயப்படுபவன் என்றால், வேறு எதனையும் செய்யாமல், நாராயணனை அடையவேண்டும் என்பதை மட்டுமே எண்ணுவாயாக ஸநத்குமார ஸம்ஹிதை - குயோநிஷ்வபி ஸஞ்ஜாதோ ய: ஸக்ருச்சரணம் கத: - தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும், யார் ஒருவன் ஸர்வேச்வரனிடம் ஒருமுறை ப்ரபத்தி செய்கிறானோ, அவன் தன்னுடைய தாய்தகப்பனைக் கொன்றவனாக இருந்தாலும், காக்கப்படுகிறான்.