Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 2)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

மூலம் – உபாய ப்ரபாவ வ்யவஸ்தை சொன்னோம். இனிமேல் உபாய ப்ரபாவத்தை ஸங்குசிதமாகப் பார்த்து வரும் தப்புகள் பரிஹரிக்கிறோம்.

– உபாயமாக உள்ள ப்ரபத்தியின் ப்ரபாவம் எங்கு எல்லையுடன் கூடியதாக உள்ளது என்று கூறினோம். இனி ப்ரபத்தியைக் குறைவாக மதிப்பிடுபவர்களின் தவறான எண்ணங்களை நீக்குவோம்.