Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 1)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
மூலம் – சிலாதே: ஸ்த்ரீத்வாதி: விபரிணதி: ஸ்த்வத்புதமிதம் தத: அப்யேதச்சித்ரம் யதுத தஹநஸ்யைவ ஹிமதா த்ருணஸ்யைவாஸ்த்ரத்வம் ரிபுஷு நிஹதேரேவ ஹிததா பதத்ரேணைவேஹ த்ரிபுவந பரித்ராணமிதி ச
– கல் போன்றவைகளுக்கு பெண் தன்மை உண்டாவது போன்ற அற்புதமான மாறுதல்கள் இருக்கட்டும் (அஹல்யை). அதனைக் காட்டிலும் அதிக வியப்பு அளிப்பது என்னவென்றால் அக்னிக்கு குளிர்ந்த தன்மை வருவதும் (அனுமன்), புல் ஒன்று ஆயுதமாக மாறுவதும் (காகாசுரன் விஷயத்தில்), பகைவர்களை அழித்தும் அவர்களுக்கு நன்மை அளிப்பதும் (வாலி, பூதனை முதலியவர்கள்), பாதுகைகள் அயோத்தியில் இருந்தபடி மூன்று லோகங்களைக் காப்பதும் ஆகும்.