Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 51)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
சாதுர்வர்ண்ய சதுர்விதாச்ரமமுகே பேதே யதாவஸ்திதே வ்ருத்தம் தந்நியதம் குணாநுகுணயா வ்ருத்தயா விசிஷ்டம் ச்ரிதா: த்யாகோபப்லவ நித்ய தூர சரணவ்ரஜ்யா விதௌ கோவிதா: சிந்தாம் அப்யுகுணந்தும் அந்திமயுகே அபி ஏகாந்திந: ஸந்தி ந:
– நான்கு ஜாதிகள், நான்கு ஆச்ரமங்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள பேதங்கள் சாஸ்த்ரங்களில் கூறியபடி உள்ளன. விஷ்ணுவின் பக்தனாக இருப்பதற்கு ஏற்ற அநுஷ்டானங்களால் கூடின ஜாதி மற்றும் ஆச்ரமம் ஆகியவற்றுக்கு ஏற்றதான நடத்தை உள்ளவர்களாகவும், வர்ணாச்ரம தர்மங்களைக் கைவிடுதல் என்பதாகிய குற்றத்துக்கு எப்போதும் தொலைவில் உள்ளதான ப்ரபத்தி செய்யும் விஷயத்தில் ஸாமர்த்யம் உள்ளவர்களாகவும் இருக்கின்ற பரமைகாந்திகளாகிய ப்ரபந்நர்கள் – இந்தக் கலியுகத்திலும் தங்களுக்குரிய தர்மங்களின்படி வாழ்ந்து, நாம் அவர்களைப் பற்றி ஆராயும் ரீதியில் உள்ளனர்.