Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 50)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
தகவால் தரிக்கின்ற தன்னடியார்களைத் தன் திறத்தில் மிகவாதாஞ் செய்யு மெய்யருள் வித்தகன் மெய்யுரையின் அகவா யறிந்தவ ராரணநீதி நெறிகுலைதல் அகவாரென் வெங்கள் தேசிக ருண்மை யுரைத்தனரே
– தன்னுடைய கருணை மூலமே தரிக்கின்ற தன்னுடைய அடியாகளாகிய ப்ரபந்நர்களை, தன்னைப் போன்று ஆக்குவதில் மிகுந்த அக்கறை காண்பிக்கின்ற, ஆச்சர்யமான செயல்களைக் கொண்ட க்ருஷ்ணன் அருளிச்செய்த சரமச்லோகத்தின் ஆழ்பொருளை வ்யாஸர் முதலானோர் நன்கு அறிவார்கள்; ஆகவே அவர்கள் உபநிஷத்துக்களில் உரைக்கப்பட்ட தர்ம மார்க்கம் தவறுவதை விரும்பமாட்டார்கள்; இப்படியாக உள்ள உண்மையை எங்களுடைய ஆசார்யர்கள் எங்களுக்கு உபதேசித்தனர்.