Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 47)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

ஆஹார க்ரஹ மந்த்ரார்த்த ஜாத்யாதி நியமைர்யுத: குர்யால்லக்ஷ்மீச கைங்கர்யம் சக்தி அநந்ய ப்ரயோஜந:

– உணவில் உள்ள கட்டுப்பாடுகள், ஆசார்ய பரம்பரை மூலமாக வந்த ஞானத்தை மட்டுமே ஏற்கவேண்டும் என்னும் கட்டுப்பாடுகள், தனக்காக விதிக்கப்பட்ட வேதங்களில் உள்ள மந்த்ரங்களைக் கொண்டு மட்டுமே கர்மம் செய்யவேண்டும் என்னும் கட்டுப்பாடுகள், நேர்மையான முறையில் இயற்றப்பட்ட செல்வம் மூலம் மட்டுமே கர்மங்களைச் செய்யவேண்டும் என்னும் கட்டுப்பாடுகள், இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் இன்ன கர்மத்தை மட்டுமே செய்யவேண்டும் என்னும் கட்டுப்பாடுகள் முதலானவற்றுடன் கூடியவனாக, வேறு பலனை எதிர்பாராமல், தன்னுடைய சக்திக்கு ஏற்றபடி மஹாலக்ஷ்மியின் நாயகனாகிய ஸ்ரீமந்நாராயணனுக்குக் கைங்கர்யம் செய்வானாக.