Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 44)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

ப்ரபந்நனுக்கான உபாயம்

மூலம் – அடியிலே நிரபராதனாக வேணுமென்று கோலி ப்ரபத்தி பண்ணினவனுக்கும் பின்பு இதுக்காக ப்ரபத்யந்தரம் பண்ணினவனுக்கும் உத்தரக்ருத்யம் நிரபராதமாகவே நடக்கும்.

– முதலில் ப்ரபத்தி செய்யும்போதே தன்னுடைய வாழ்க்கையில் பாவங்கள் நீங்க வேண்டும் என்று எண்ணியபடி ப்ரபத்தி செய்தவனுக்கும், பின்னர் ஒரு காலகட்டத்தில் இனி உள்ள வாழ்க்கையில் பாவம் ஏற்படக்கூடாது என்று மீண்டும் ப்ரபத்தி செய்பவனுக்கும் அதன் பின்னர் பாவங்கள் ஸம்பவிப்பதில்லை.