Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 43)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

அறிந்தே செய்யும் பாவங்களுக்கு ப்ரபந்நரும் ப்ராயச்சித்தம் செய்யவேண்டும்

மூலம் – ப்ரபந்நஸ்ய நிஷித்தைரபி அலேபமுபபாதயந் யதாபிமத ஸத்வ்ருத்த நிஷ்டேப்ய: கிமஸூயதி ஆஜ்ஞாதிலங்கநே யஸ்ய ரக்ஷகத்வம் ந பஜ்யதே ஆஜ்ஞாநுபாலநே தஸ்ய கதம் ததுபருத்தயதே ந சாசாரம் விநா கிஞ்சித் கைங்கர்யமுபபத்யதே ந ஹி சௌசமுக்ருத்வைவ ஸமாராதநமர்ஹதி ஆசாரப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: இதி பஞ்சமவேதே அபி ஸர்வசாஸ்த்ரார்த்த ஈரித: ப்ரபத்தி ப்ரதிஸந்தாநம் ஆப்தைர்யதுபதிச்யதே தத் ஸ்வாதிகார நியத ஹாநோபாதாந ஸித்தயே ப்ரதிஸந்தாநதோ ஹி ஸ்யாத் அதீபூர்வேஷ்வலேபதீ: புத்திபூர்வேஷ்வபி புந: ப்ரபத்தேரேவ ஸங்க்ரஹ: அதோ நிரபராதேந வர்திதவ்யம் க்ருதாத்மநா அபராத ப்ரஸங்கே ச புந: ப்ரபதநம் க்ஷமம்

– ப்ரபந்நஸ்ய நிஷித்தைரபி அலேபமுபபாதயந் யதாபிமத ஸத்வ்ருத்த நிஷ்டேப்ய: கிமஸூயதி – ப்ரபந்நன் ஒருவன் சாஸ்த்ரங்களால் தடுக்கப்பட்டற்றைச் செய்தாலும் தோஷம் இல்லை என்று கூறுபவர்கள், பகவானால் விதிக்கப்பட்ட கர்மங்களைச் சரிவர செய்பவர்களைக் கண்டு ஏன் பொறாமை கொள்ளவேண்டும்? ஆஜ்ஞாதிலங்கநே யஸ்ய ரக்ஷகத்வம் ந பஜ்யதே ஆஜ்ஞாநுபாலநே தஸ்ய கதம் ததுபருத்தயதே – ஸர்வேச்வரனின் ஆணைகளை மீறி நடந்தாலும் அவன் நம்மைக் காப்பாற்றுவதிலிருந்து தவறுவதில்லை என்று கூறினால், அவனுடைய ஆணைகளை மதித்து நடப்பவர்களை அவன் காப்பாற்றாமல் இருக்கக்கூடும் என்று எவ்விதம் கூற முடியும்? ந சாசாரம் விநா கிஞ்சித் கைங்கர்யமுபபத்யதே ந ஹி சௌசமுக்ருத்வைவ ஸமாராதநமர்ஹதி – ஆசாரம் இன்றிச் செய்யும் எந்தவிதமான கைங்கர்யமும் பொருந்தாது. ஒருவன் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவில்லை என்றால், அவன் ஸர்வேவரனை ஆராதிக்கத் தகுதி அற்றவன் ஆகிறான். ஆசாரப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: இதி பஞ்சமவேதே அபி ஸர்வசாஸ்த்ரார்த்த ஈரித: - “தர்மம் என்பது ஆசாரத்தால் உண்டாகிறது, அந்தத் தர்மத்தின் நாதனாக ஸர்வேச்வரன் உள்ளான்”, என்று ஐந்தாவது வேதமாக உள்ள மஹாபாரதம் அனைத்து சாஸ்த்ரங்களிலும் உள்ளவற்றை உரைத்தது. ப்ரபத்தி ப்ரதிஸந்தாநம் ஆப்தைர்யதுபதிச்யதே தத் ஸ்வாதிகார நியத ஹாநோபாதாந ஸித்தயே – முன்பு செய்யப்பட்டதாகிய, நம்பத்தகுந்தவர்களால் உபதேசிக்கப்பட்ட ப்ரபத்தியைச் சிந்தித்தபடி இருத்தல் என்பது தன்னுடைய அதிகாரங்களுக்குட்பட்ட ப்ராயச்சித்தத்தைச் செய்யவும், அல்லாதவற்றை விடுவதற்குமே ஆகும். ப்ரதிஸந்தாநதோ ஹி ஸ்யாத் அதீபூர்வேஷ்வலேபதீ: புத்திபூர்வேஷ்வபி புந: ப்ரபத்தேரேவ ஸங்க்ரஹ: - ப்ரபத்தியைச் சிந்திப்பதன் மூலம் அறியாமல் செய்யும் தவறுகள் ஒட்டாது என்னும் எண்ணமும், அறிந்துகொண்டே செய்யும் பாவங்களுக்கான ப்ராயச்சித்தம் மீண்டும் ப்ரபத்தியே ஆகிறது என்னும் எண்ணமும் உண்டாகிறது. அதோ நிரபராதேந வர்திதவ்யம் க்ருதாத்மநா அபராத ப்ரஸங்கே ச புந: ப்ரபதநம் க்ஷமம் – ஆகவே புத்தியுள்ள ஒருவன் எந்தவிதமான அபசாரங்களும் செய்யாமல் இருத்தல் வேண்டும். அபசாரங்கள் உண்டானால் மீண்டும் ப்ரபத்தி செய்து கொள்வதே சிறந்தது.