Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 42)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

அறிந்தே செய்யும் பாவங்களுக்கு ப்ரபந்நரும் ப்ராயச்சித்தம் செய்யவேண்டும்

மூலம் – ஆகையால் உபக்லேசங்களும், இங்குற்ற பகவதநுபவத்துக்குக் கரணாசக்திஞான ஸங்கோச துக்காதிகள் அடியாக வரும் விச்சேத ஸங்கோசங்களும், நியதாயுஸ்ஸுக்கள் அல்லாதார்க்கு ஆயுர்வ்ருத்தியாலே பரமபலத்துக்கு விளம்பமும் ப்ரஸங்கியாமைக்குப் புந: ப்ராபதநம் பண்ணுகிறது. இது வேண்டா என்பார்க்கும் நிஷித்தங்களை க்ஷமிக்கிற ந்யாயத்தாலே இதுவும் க்ஷமாவிஷயமாகையாலே இதுவே உசிதம். புத்திபூர்வோத்த ராகத்துக்கும் ஏற்கனவே ப்ரபத்தி பண்ணவொண்ணாதென்னுமிடமும், முன்பு கோலின பலமொழியப் பலாந்தரார்த்தமாகப் ப்ரபத்யந்தரம் பண்ணுகையில் விரோதம் இல்லையென்னுமிடமும் முன்பே ஸமர்த்தித்தோம். இப்படி பகவதாஜ்ஞாஸித்தமான ஸதாசாராநுபாலநத்திலும் விரோதமில்லாமை கண்டுகொள்வது.

– எனவே துக்கங்களாலும்; இந்த்ரியங்களின் வலிமை குறைதல், ஞானம் குறையத் தொடங்குதல் முதலான துக்கங்கள் காரணமாக பகவத் அனுபவத்திற்கு உண்டாகும் தடைகளும்; சராசரியாக வாழும் ஆயுளைக் காட்டிலும் அதிகமான உயிருடன் இருப்பதால் மோக்ஷத்திற்கான காலதாமதம் ஆவதால் துக்கமும் – முதலானவை உண்டாகக்கூடாது என்றால் மீண்டும் ஒருமுறை செய்த தவறுகளுக்கான ப்ராயச்சித்தம் அவசியம் செய்தல்வேண்டும். இத்தகைய ப்ரபத்தி மீண்டும் தேவையில்லை என்று கூறுபவர்களுக்கும், தவறுகளைச் ஸர்வேச்வரன் பொறுத்துக்கொள்வான் என்று அவர்கள் கூறுவதால், இவ்விதம் ப்ராயச்சித்தம் செய்வதும் அதற்கான முயற்சிகளே என்பதால், ப்ராயச்சித்தமான ப்ரபத்தி பொருத்தமே ஆகும். தான் அறிந்துகொண்டே செய்யப்போகும் தவறுகளுக்காக முன்கூட்டியே ப்ராயச்சித்தமான ப்ரபத்தி செய்தல் என்பது பொருந்தாது என்றும், முன்னர் ப்ரபத்தி செய்தபோது ப்ரார்த்திக்காத பலனுக்காக மீண்டும் ஒருமுறை ப்ரபத்தி செய்வதில் தவறில்லை என்றும் முன்பே கூறப்பட்டது. ஆக ஸர்வேச்வரனின் ஆணைக்கு உட்பட்டு செய்யும் எந்தவிதமான கர்மங்களிலும், எந்தவிதமான தோஷமும் இல்லை என்று அறியவேண்டும்.