Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 37)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்
மூலம் - நியமவிசேஷாதிகளோடே கூடாத அஹிம்ஸாதிமாத்ரமும் தர்ம சப்தார்த்தம் என்னும் பக்ஷத்திலும் சொல்லுகிறோம்: அதர்ம பரிஹாரே அபி தர்மத்வேந விவக்ஷிதே ஸ்யாத் ஸ்வதந்த்ர விதேரேவ நித்யம் தஸ்ய பரிக்ரஹ: ஆநுகூல்ய பரித்யாகம் ப்ராதிகூல்ய பரிக்ரஹம் ப்ரபத்த்யங்கம் ப்ரதிஜ்ஞாதும் ந சக்யம் ஸாதுஸம்ஸதி ப்ரபந்நமதிக்ருத்யைவ ஸதாசாராநதிக்ரம: ப்ரபத்த்யத்யாய படித: ப்ரதிஸந்தீயதாமிஹ இப்படி அற்றபின் சோதநாம் ப்ரதிசோதநாம், ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச என்கிற இடத்திலும் ப்ரபத்திக்கு அங்கமாக ஒன்றும் ஸ்வீகரிக்க வேண்டா என்றதாமித்தனை. முமுக்ஷுமாத்ரத்தைப் பற்ற த்ரைவர்ணிகாந் த்யஜேத்தர்மாந் என்கிற கட்டளையிலே பலாந்தர ஸாதநமாகச் சோதிதைகளான ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவற்றுக்கு உறுப்பான சாஸ்த்ரங்களையும் விடச் சொன்னதாகவுமாம்.
– அஹிம்ஸை என்பது நியமங்களுடன் கூடியது அல்ல என்றாலும், அதனைத் தர்மம் என்னும் பதம் மூலம் குறிக்கலாம் என்று சிலர் கூறுவர்; இவ்விதம் கொண்டாலும், பதில் உரைக்கலாம். கீழே உள்ள வரிகளைக் காண்க: அதர்ம பரிஹாரே அபி தர்மத்வேந விவக்ஷிதே ஸ்யாத் ஸ்வதந்த்ர விதேரேவ நித்யம் தஸ்ய பரிக்ரஹ: - அதர்மத்தை விடுதல் என்பது தர்மம் என்னும் பதத்திற்கு அர்த்தமாக உரைக்கப்பட்டாலும், அதர்மத்தைக் கைவிடுதல் என்பது தனியாகவே ஏற்கப்பட்ட ஒன்றாகையால், அது எப்போதுமே உள்ளதாகிறது. ஆநுகூல்ய பரித்யாகம் ப்ராதிகூல்ய பரிக்ரஹம் ப்ரபத்த்யங்கம் ப்ரதிஜ்ஞாதும் ந சக்யம் ஸாதுஸம்ஸதி – ஆநுகூல்யத்தைக் கைவிடுவதையும் (ஆநுகூல்யம் என்றால் ஸர்வேச்வரனுக்கு மகிழ்வை உண்டாக்கும் செயல்கள்), ப்ரதிகூல்யத்தை ஏற்பதும் (ப்ரதிகூல்யம் என்றால் ஸர்வேச்வரனுக்கு வருத்தம் உண்டாக்கும் செயல்கள்) ஆகிய இரண்டும் ப்ரபத்தியின் அங்கங்கள் என்று கற்றவர்கள் உள்ள சபையில் கூற முடியாது. ப்ரபந்நமதிக்ருத்யைவ ஸதாசாராநதிக்ரம: ப்ரபத்த்யத்யாய படித: ப்ரதிஸந்தீயதாமிஹ – வர்ணாச்ரம தர்மங்களைக் கைவிடுதல் கூடாது என்று ப்ரபந்நனைக் குறித்தே கூறப்பட்டுள்ளது. இப்படியாக முடிவு செய்த பின்னர், சோதநாம் ப்ரதிசோதநாம், ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் - உத்தவா! ஆகவே ஒரு குறிப்பட்ட பலனுக்காக உள்ள உபாயமாக இதனைச் செய் என்னும் விதியையும், இதனைச் செய்யவேண்டாம் என்னும் விதியையும், இப்படியாக விதிக்கின்ற தர்மத்தையும், இந்த இரண்டு கர்மங்களுக்கும் உதவியாக இதுவரை உன்னால் கேட்கப்பட்டதும், இனி கேட்க உள்ளதும் – என்ற வரியானது ப்ரபத்திக்கு அங்கமாக இவற்றைக் கொள்ளவேண்டாம் என்பதே ஆகும். முமுக்ஷுவைக் குறித்தும் த்ரைவர்ணிகாந் த்யஜேத்தர்மாந் – தர்மம், அர்த்தம், காமம் என்பதற்குச் சாதனமான தர்மங்களைக் கைவிடவேண்டும் – என்று மற்ற பலன்களைக் குறித்துக் கூறப்பட்டவற்றையும் காண்க.