Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 36)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்
மூலம்– நிஷித்த நிவ்ருத்தி ரூபங்களெல்லாம் ஸர்வதர்ம சப்தத்தாலே ஸங்க்ருஹீதங்கள் என்னுமிடம் தர்ம சப்தார்த்தம் அறியாமல் சொன்னபடியென்று சில ஆசார்யர்கள் நிர்வஹிப்பார்கள். எங்ஙனேயென்னில் – நிவ்ருத்திகளிலே ஒரு பலத்துக்கு ஸாதநமாக நியம விசேஷங்களுடனேயே செய்தவை தர்ம சப்தார்த்தமாம். ஸாமாந்யமான அஹிம்ஸாதிமாத்ரம் பாபாபாவமாமித்தனை போக்கி தர்மசப்தத்துக்கு முக்யார்த்தமன்று. ஆகையால் பலவிசேஷ நியமவிசேஷங்களோடே கூடின அஹிம்ஸாதிகளை விடுகையாவது, பலங்களையும் நியமங்களையும் விடுகை; மற்றும் நிவ்ருத்தி சாஸ்த்ரத்திற் சொன்ன நிவ்ருத்திகளை விடுகைக்கு விரகில்லை.
– தர்மம் என்னும் பதத்தின் பொருள் அறியாத காரணத்தினால், “ஸர்வ தர்மாந்” என்பதன் மூலம் தடுக்கப்பட்ட கர்மங்களின் தடைகளும் கூறப்பட்டுள்ளது என்பதை ஒரு சில ஆசார்யர்கள் உரைப்பர். இது எப்படி என்றால் – தடுக்கப்பட்டவற்றில் ஒரு சில கர்மங்கள் சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டும், ஆனால் குறிப்பிட்ட பலன்களுக்காகச் செய்வதாகவும் இருக்கலாம்; இவையே தர்மம் என்னும் சப்தம் மூலம் கூறப்படுவதாகக் கொள்க. உதாரணமாக அஹிம்ஸை என்பது பாவங்கள் இல்லாத ஒன்றே அல்லாமல், அதன் பொருட்டு எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை என்பதால் அதனை, தர்மம் என்று கூற இயலாது. ஆகவே ஒரு பலனின் பொருட்டு பின்பற்றப்படும் அஹிம்ஸை என்பதை விடுதல் என்றால், அதன் மூலம் விளையும் பலன்கள் மற்றும் அந்த விதிமுறைகள் ஆகியவற்றைக் கைவிடுவதே ஆகும். இது அல்லாமல் தடுக்கப்பட்ட கர்மங்களின் தடைகளைக் கைவிடுதல் என்பது எந்தவிதமான முக்தி சாஸ்த்ரங்களிலும் கூறப்படைல்லை.