Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 34)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதன் விளக்கம்
மூலம்– த்யஜ தர்மமதர்மம்ச என்கிறதுவும் காம்யங்களையும் நிஷித்தங்களையும் விடச் சொன்னபடி த்யஜ ஸத்யாந்ருதே அபி என்கிறதுவும் ஆத்மாநுபவத்தையும் ஐச்வர்யத்தையும் ப்ரயோஜனமாகக் கோலாதே கொள் என்றபடி. வாசிகங்களை விசேஷித்துச் சொல்லிற்றாகவுமாம். இதின் அருமை தோற்றுகைக்காக உபே ஸத்யாந்ருதே த்யக்த்வா என்று அநுவதிக்கிறது. த்யாகத்தில் கர்த்ருத்வமும் பராதீநமென்று அநுஸந்திக்கைக்காக யேந த்யஜஸி தத்த்யஜ என்கிறது.
– மஹாபாரதம் சாந்திபர்வம் (339-44) - த்யஜ தர்மமதர்மம்ச– உபாயமான தர்மத்தையும், விலக்கப்பட்ட அதர்மத்தையும் கைவிடுவாயாக – என்ற வரியானது காம்ய கர்மங்களையும், தடுக்கப்பட்ட கர்மங்களையும் விடும்படி உரைப்பதாகும். இதே போன்று, மஹாபாரதம் சாந்திபர்வம் (339-44) - த்யஜ ஸத்யாந்ருதே அபி – ஸத்யம் என்னும் ஆத்ம அனுபவத்தையும், அந்ருதம் என்னும் மற்ற விஷய அனுபவங்களையும் கைவிடுவாயாக – என்ற வரியானது ஆத்ம அனுபவம் மற்றும் ஐச்வர்யம் ஆகியவற்றைப் பலனாக எண்ணக் கூடாது என்று கூறுகிறது. மேலும், மஹாபாரதம் சாந்திபர்வம் (339-44) - உபே ஸத்யாந்ருதே த்யக்த்வா– எந்த எண்ணத்தால் இந்த இரண்டையும் விடுகிறாயோ – என்றும் கூறியது. நம்முடைய கர்த்ருத்வம் என்பது பகவானின் வசப்பட்டது என்பதை எண்ணும்விதமாகவே, மஹாபாரதம் சாந்திபர்வம் (339-44) - யேந த்யஜஸி தத்த்யஜ - அந்த எண்ணத்தையும் விடுவாயாக – என்றது.